இந்தியாவில் 58-வது நாளாக குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு
நாட்டில் 58-வது நாளாக தினசரி கொரோனா பாதிப்பு என்பது வெகுவாக குறைந்திருக்கிறது.
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 1,20,529 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களின் மொத்த எண்ணிக்கை என்பது 2,86,94,879ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும்1,97,894 பேர் நலம் பெற்று வீடு திரும்பியுள்ளனர். மொத்தமாக இதுவரை 2,67,95,549 பேர் நலம் பெற்றுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் தொற்றின் காரணமாக 3,380 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,44,082ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் சதவீதம் 93புள்ளி மூன்று எட்டு ஆகவும், உயிரிழப்பு சதவீதம் ஒன்று புள்ளி 2ஆகவும் உள்ளது. இதுவரை மொத்தமாக 22,78,60,317 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.