\
இந்தியாவில் 35,000-க்கும் கீழ் குறைந்த ஒருநாள் பாதிப்பு

இந்தியாவில் 35,000-க்கும் கீழ் குறைந்த ஒருநாள் பாதிப்பு

இந்தியாவில் 35,000-க்கும் கீழ் குறைந்த ஒருநாள் பாதிப்பு
Published on: 

இந்தியாவில் கடந்த 111 நாட்களில் இல்லாத வகையில் தினசரி கொரோனா பாதிப்பு 35 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 34,703 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை நாடு முழுவதும் 3,06,19,932 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதே வேளையில் ஒரே நாளில் 51,864 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,97,52,294ஆக உயர்ந்துள்ளது.

தற்போது நாடு முழுவதும் 4,64,357 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 553 பேர் கொரோனாவால் உயிரிழந்திருப்பதால், இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,03,281ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 97.17 ஆகவும், உயிரிழப்பு விகிதம் 1.32 ஆகவும் உள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com