\
இதுவரை இல்லாத அளவில் இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 3.32 லட்சம் ஆக உயர்வு

இதுவரை இல்லாத அளவில் இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 3.32 லட்சம் ஆக உயர்வு

இதுவரை இல்லாத அளவில் இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 3.32 லட்சம் ஆக உயர்வு
Published on: 

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரேநாளில் 3,32,730 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் 2.95 லட்சம், நேற்று 3.14 லட்சமாக இருந்த பாதிப்பு இன்று 3.32 லட்சமாக உயர்ந்துள்ளது. இதனால் இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,59,30,965லிருந்து 1,62,63,695ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரேநாளில் கொரோனாவுக்கு 2,263 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாட்டில் கொரோனா பாதிப்பால் இறந்தோர் எண்ணிக்கை 1,84,657லிருந்து 1,86,920ஆக உயர்ந்துள்ளது. ஒரேநாளில் 1,93,279 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,34,54,880லிருந்து 1,36,48,159ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 84.46ஆகவும், உயிரிழப்பு 1.16%ஆகவும் உள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் சிகிச்சைபெறுவோர் எண்ணிக்கை 24,28,616 ஆக உயர்ந்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com