தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 2,500ஐ தாண்டியது
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு இரண்டாயிரத்து 500 ஐ தாண்டியது. சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்தை நெருங்குகிறது.
தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கைப்படி, கடந்த 24 மணி நேரத்தில் இரண்டாயிரத்து 579 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 969 பேரும், கோவையில் 273 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 250 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 86 ஆயிரத்து 673 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்து 527 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை தொற்று பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 58 ஆயிரத்து 75 ஆக உள்ளது. ஒரே நாளில் 19 பேர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 12 ஆயிரத்து 719 ஆக அதிகரித்துள்ளது.