\
கிருஷ்ண ஜெயந்தி உறியடி: உயர்நீதிமன்றம் புது உத்தரவு

கிருஷ்ண ஜெயந்தி உறியடி: உயர்நீதிமன்றம் புது உத்தரவு

கிருஷ்ண ஜெயந்தி உறியடி: உயர்நீதிமன்றம் புது உத்தரவு
Published on

கிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி நடக்கும் உறியடி பிரமிடு அமைப்பதில் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று மும்பை உயர்நீதிமன்றத்தில் மகாராஷ்டிர மாநில அரசு தெரிவித்தது.

கிருஷ்ண ஜெயந்தி விழா, வரும் 14ம் தேதி கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நடைபெறும் ‘தஹி ஹண்டி’ எனப்படும் நிகழ்ச்சியில் பிரமிடு அமைத்து உறியடியில் ஈடுபடுவது வ்ட இந்தியாவில் வழக்கம். இதில் சிறுவர்களை ஈடுபடுத்துவதாலும், பாதுகாப்பு பிரச்சினை காரணமாகவும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதாகக் கூறி மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் எம்.எஸ்.கர்னிக் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

மாநில அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘உறியடி நிகழ்ச்சியை மாநில அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சாகச விளையாட்டு என அறிவித்தது. ஆகையால், குழந்தை தொழிலாளர் சட்டப்படி, 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள், உறியடியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள்’ என்று வாதிட்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ‘இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கும் அதிகாரம் மாநில அரசிடம் இருப்பதால், உறியடியில் ஈடுபடுபவர்களின் வயதிலும் பிரமிடின் உயரத்திலும் உயர்நீதிமன்றம் கட்டுப்பாடு விதிக்க முடியாது’ என்று கூறினர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com