இந்தியா
மனைவியுடன் சண்டை - 2 வயது மகனை பால்கனியில் இருந்து வீசிவிட்டு தானும் கீழே குதித்த நபர்!
மனைவியுடன் சண்டை - 2 வயது மகனை பால்கனியில் இருந்து வீசிவிட்டு தானும் கீழே குதித்த நபர்!
மனைவி உடனான தகராறில் இளைஞர் ஒருவர் தனது 2 வயது குழந்தையை பால்கனியில் இருந்து கீழே வீசிவிட்டு அவரும் கீழே குதித்த அதிர்ச்சி சம்பவம் டெல்லியில் நிகழ்ந்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமையன்று (டிசம்பர் 16) குடும்பத்தைக் காண மான் சிங் அங்கு வந்துள்ளார். பிறகு கணவன் - மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் தனது 2 வயது மகனை பால்கனியில் இருந்து கீழே வீசியுள்ளார் சிங் . பிறகு அவரும் கீழே குதித்துவிட்டார். இரவு 7 மணியளவில் மான் சிங் அங்கு வந்த நிலையில், 2-3 மணி நேர வாக்குவாதத்திற்கு பிறகு இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதனையடுத்து, காயமடைந்த இருவரும் AIIMS மருத்துவமனையில் மிக கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று காவல்துறையினர் கூறுகின்றனர். முதல் மாடியில் இருந்து தந்தையும், 2 வயது மகனும் கீழே விழுந்துள்ளநிலையில், தரையில் இருந்து 21 அடி உயரம் இருக்கும் என போலீசார் கூறுகின்றனர்.
-ஷர்நிதா