\
Cyclone Murasu Intensifies Over Bay of Bengal
கோப்புபடம்Windy & ANI

தீவிரப் புயலாக வலுவடைந்தது ’முரசு’.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

வங்கக்கடலில் உருவாகியுள்ள 'முரசு' புயல் தீவிரப்புயலாக வலுவடைந்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Published on: 

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில், தற்போது வங்கக்கடலில் 2வது புயல் உருவாகியிருக்கிறது. கடந்த அக்டோபர் 31-ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் நிக்கோபார் தீவுகள், அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. தொடர்ந்து, நேற்றைய தினம் புயலாக மாறியது. இந்தப் புயல் தற்போது தீவிரப் புயலாக மாறியிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Windy

இந்தப் புயலானது, சென்னைக்குக் வடகிழக்கே சுமார் 260 கி.மீ, நெல்லூருக்கு தென்கிழக்கே 290 கி.மீ, மச்சிலிப்பட்டணத்திற்குத் தென்கிழக்கே 320 கி.மீ, காவலிக்குக் தென்கிழக்கே 310 கி.மீ தொலைவில் மையம் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அருகில் நெல்லூர் மற்றும் நரசாப்பூர் இடையே இன்று நள்ளிரவு (நவம்பர் 2) அல்லது நாளை அதிகாலை (நவம்பர் 3) கரைக்கடக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கரையைக் கடக்கும்போது, முரசு புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து, 100 முதல் 110 கி.மீ. வேகத்திலும் அவ்வப்போது 120 கி.மீ. வேகத்திலும் காற்று வீசக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், நேற்று இரவு முதல் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், இம்மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும், வடக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகள் மற்றும் தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நவம்பர் 4 காலை வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

Cyclone Murasu Intensifies Over Bay of Bengal
மெதுவாக நகரும் புயல் சின்னம் : எங்கே கரையைக் கடக்கும்?தமிழ்நாட்டுக்கு மழை பெய்ய வாய்ப்பா?