மோன்தா புயல்
மோன்தா புயல்pt web

ஆந்திராவில் எப்போது கரையைக் கடக்கும் மோன்தா புயல்.. தற்போதைய நிலவரம் என்ன? | Montha Cyclone

வங்கக் கடலில் உருவாகியிருக்கும் மோன்தா புயல் இன்று இரவு ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் இடையே கரையை கடக்கவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Published on
Summary

வங்கக் கடலில் உருவாகியிருக்கும் மோன்தா புயல் இன்று இரவு ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் இடையே கரையை கடக்கவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், ஆந்திராவில் புயல் கரையை கடந்தாலும் ஒடிசா மற்றும் தமிழ்நாட்டிலும் புயலின் தாக்கம் இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மூன்று மாநில அரசுகளும் எடுத்துள்ளன.

வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ‘மோன்தா’ புயல், 15 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. காக்கிநாடாவில் இருந்து 240 கி.மீ. தொலைவிலும், தெற்கு மற்றும் தென்கிழக்கு திசையில் வங்கக்கடலில் தற்போது ‘மோன்தா’ புயல் மையம் கொண்டுள்ளது. விசாகப்பட்டினத்துக்கு 320 கி.மீ. தொலைவிலும், மசூலிப்பட்டினத்துக்கு 160 கி.மீ. தொலைவிலும் புயல் மையம் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளது. ‘மோன்தா’ புயல் 15 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருவதாகவும், இன்று மாலை அல்லது இரவு நேரத்தில் மசூலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினம் இடையே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அப்போது, மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் தெரிவித்துள்ளது.

புயல், மாதிரிப்படம்
புயல், மாதிரிப்படம்pt web

ஆந்திர மாநிலத்தில் புயல் கரையை கடக்கும் என்பதால், மோன்தா புயல் பாதிப்புகளை சமாளிக்க ஆந்திர அரசு விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. புயல் பாதித்த பகுதி மக்கள் தங்குவதற்காக, 3 ஆயிரத்து 174 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் உணவு, எரிபொருள் தங்கு தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். புயல் குறித்து மக்கள் அஞ்ச வேண்டாம் என்றும் அரசின் அறிவுரைப்படி செயல்பட்டாலே போதும் என்றும் அவர் கூறினார். குடியிருப்பு பகுதிகளில் ஒலிப்பெருக்கி மூலம் மக்களுக்கு வழிகாட்டுதல் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். புயல் இன்று இரவு கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் ஸ்ரீகாகுளம், காகிநாடா, நெல்லூர், விசாகப்பட்டினம், அனகாபள்ளி, கோனசீமா மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது

மோன்தா புயல்
10 கி.மீ. வேகத்தில் நகரும் மோன்தா புயல்.. தற்போது எங்கே நிலை கொண்டுள்ளது? | Cyclone Montha

மோன்தா புயல் ஆந்திர மாநிலத்தில் கரையை கடந்தாலும் அதன் தாக்கம் தமிழ்நாடு மற்றும் ஒடிசா மாநிலத்திலும் இருந்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் உள்ள 3 துறைமுகங்களில் நான்காம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மோன்தா புயல் பாதிப்பில் சென்னை - எண்ணூரில் 13 சென்டி மீட்டர் அளவுக்கு மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. தீவிர புயலாக ‘மோன்தா’ வலுப்பெற்றுள்ளதால், சென்னை, எண்ணூர் மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகங்களில் நான்காம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்து வௌம் கனமழை காரணமாக ஆரஞ்சு அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது.

மோன்தா புயல்
மோன்தா புயல்pt web

மோந்தா புயலைச் சமாளிக்க ஒடிசா மாநிலம் முழுமையாகத் தயாராக இருப்பதாக முதல்வர் மோகன் சரண் மாஜி தெரிவித்திருக்கிறார். மோன்தா புயல் காரணமாக மாநிலத்திக் தென் பகுதியில் உள்ள எட்டு மாவட்டங்களில் 2,000க்கும் மேற்பட்ட பேரிடர் நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. தயார்நிலையை மதிப்பாய்வு செய்த பிறகு, 11,396 பேர் தங்குமிடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், மல்கன்கிரி, கோராபுட், ராயகடா, கஜபதி, கஞ்சம், நபரங்பூர், கலஹண்டி மற்றும் காந்தமால் ஆகிய பகுதிகளில் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் தொடர்ந்து வெளியேற்றங்கள் ஏற்பட்டு வருவகின்றன. இந்தப் புயல் காரணமாக ஒரு உயிரிழப்பு கூட ஏற்ப்பட்டு விடக்கூடாது என்ற நோக்கத்தோடு செயல்பட்டு வருவதாக ஒடிசா முதல்வர் மாஜி கூறியுள்ளார்.

மோன்தா புயல்
"2 மாதங்களுக்குள் சென்னையில் அடுத்தடுத்த புயல்களுக்கு வாய்ப்பு" - வானிலை ஆய்வு மைய இயக்குநர் அமுதா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com