புயல், மாதிரிப்படம்pt web
இந்தியா
Cyclone Montha | கரையை கடந்த நிலையில் கொட்டித்தீர்த்த கனமழை.. 110 கிமீ வேகத்தில் வீசிய காற்று
மோன்தா புயல், ஆந்திராவின் காக்கிநாடா அருகே நள்ளிரவு 1 மணியளவில் கரையை கடந்தது.
மோன்தா புயல், ஆந்திராவின் காக்கிநாடா அருகே நள்ளிரவு 1 மணியளவில் கரையை கடந்தது. காக்கிநாடாவுக்கு தெற்கே மசூலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் இடையே மோன்தா புயல் கரையை கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
புயல் கரையை கடந்தபோது மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகம் வரையிலும் காற்று வீசியது. பலத்த காற்று காரணமாக மசூலிப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மோன்தா புயலால், ஸ்ரீகாகுளம், விஜயநகரம், விசாகப்பட்டினம், அனகப்பள்ளி என ஆந்திராவின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டிய நிலையில், பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. அவற்றை உடனுக்குடன் அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 76 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டு, முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.

