\
Amphan புயல் அப்டேட்ஸ்: மீனவர்களுக்கு எச்சரிக்கை என்ன?

Amphan புயல் அப்டேட்ஸ்: மீனவர்களுக்கு எச்சரிக்கை என்ன?

Amphan புயல் அப்டேட்ஸ்: மீனவர்களுக்கு எச்சரிக்கை என்ன?
Published on: 

Amphan புயல் தற்போது அதி தீவிர புயலாக மாறியுள்ளது என்றும் நாளை கரையைக் கடக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம்,   வங்கக் கடலில் மிக கடும் புயலாக (super cyclone) மாறியிருந்த Amphan புயல் தற்போது வலுவிழந்து அதி தீவிர புயலமாக மாறியுள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும், “அதி தீவிர புயலாக மாறியுள்ள Amphan புயல், கொல்கத்தாவிற்கு சுமார் 700 கிமீ தொலைவில் மேற்கு மத்திய வங்கக் கடல் பகுதியில் தற்போது நிலை கொண்டுள்ளது. கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 16 கிமீ வேகத்தில் வடகிழக்கு திசை நோக்கி நகர்கிறது. இது மேலும் வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து வலுவிழந்து நாளை வங்கதேசத்தில் கரையை கடக்கும். மேற்கு மத்திய மற்றும் தெற்கு வங்க கடல் பகுதியில் காற்று மணிக்கு 150-160 கிமீ வேகத்தில் வீச வாய்ப்புண்டு. கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம். தெற்கு வங்கக் கடல், குமரிக்கடல் பகுதிக்கும் செல்ல வேண்டாம்” என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com