நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் இப்போது எத்தனை சதவீதம் பெண் உறுப்பினர்கள் இருக்கிறார்கள் தெரியுமா?

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டால் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 33 விழுக்காடு பெண்களுக்கு ஒதுக்கப்படுவது உறுதி செய்யப்படும்.
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா
மகளிர் இட ஒதுக்கீடு மசோதாமுகநூல்

தற்போதுள்ள சூழலில் நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை எவ்வளவு? அறியலாம்....

மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவானது நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் அறிவிக்கப்பட்டதில் இருந்து மீண்டும் அரசியல் கட்சிகளால் வலியுறுத்தப்படும் ஒரு முக்கிய விவகாரமாக இருந்தது. பாலின சமத்துவம் குறித்து அதிகம் பெருமையாகப் பேசப்படும் நாட்டின் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களின் எண்ணிக்கை என்பது மிகக் குறைந்த அளவிலேயே இருப்பதுதான் இம்மசோதா நிறைவேற்றம் குறித்துப் பலரும் வலியுறுத்தி வந்ததற்கு காரணம். சுமார் 27 ஆண்டு காலத்திற்குப் பின் மசோதா நிறைவேறுதற்கான சாத்தியக் கூறு தென்படுகிறது.

parliament monsoon session
parliament monsoon sessionpt web

நாடாளுமன்ற மக்களவையில் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை 15 விழுக்காட்டிற்கும் குறைவாக உள்ளது என்று புள்ளி விவரங்கள் வாயிலாகத் தெரியவந்துள்ளது. அதாவது 543 மொத்த உறுப்பினர்களைக் கொண்டுள்ள மக்களவையில் தற்போது 78 உறுப்பினர்களே பெண்கள். மாநிலங்களவையில் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 14 விழுக்காடாகும்.

சட்டமன்றங்களை எடுத்துக் கொண்டோம் என்றால் மேற்கு வங்கத்தில் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை 14.4 விழுக்காடாக உள்ளது. சத்தீஸ்கரில் 13.7 விழுக்காடாக உள்ள பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை ஜார்க்கண்ட் சட்டமன்றத்தில் 12.35 விழுக்காடாக இருக்கிறது.

சட்டமன்றம்
சட்டமன்றம்முகநூல்

பீகார், ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தராகண்ட், உத்தரப் பிரதேசம் மற்றும் டெல்லி சட்டமன்றங்களில் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை 10 முதல் 12 விழுக்காடு என்ற அளவிலேயே இருக்கிறது. ஆந்திரா, தமிழ்நாடு, தெலங்கானா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, குஜராத், இமாச்சலப் பிரதேசம், கோவா, அருணாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்ட்ரா, மணிப்பூர், ஒடிசா, மேகாலயா, சிக்கிம் மற்றும் திரிபுரா மாநிலப் பேரவைகளில் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை 10 விழுக்காட்டிற்கும் குறைவாகவே உள்ளது. இத்தகைய நிலையினை மாற்றிடவே இந்த மசோதா அவசியமாகிறது.

10 %-க்கும் குறைவாக பெண் உறுப்பினர்கள் உள்ள மாநிலங்கள்

ஆந்திரா, தமிழ்நாடு, தெலங்கானா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, குஜராத், இமாச்சலப் பிரதேசம், கோவா, அருணாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்ட்ரா, மணிப்பூர், ஒடிசா, மேகாலயா, சிக்கிம் மற்றும் திரிபுரா

10% முதல் 12% பெண் உறுப்பினர்கள் உள்ள மாநிலங்கள்

Summary

பீகார், ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான்,உத்தராகண்ட், உத்தர பிரதேசம் மற்றும் டெல்லி

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com