தேர்தலில் பணப்பலத்தை கட்டுப்படுத்த சட்டங்கள் போதாது: தலைமை தேர்தல் ஆணையர்

தேர்தலில் பணப்பலத்தை கட்டுப்படுத்த சட்டங்கள் போதாது: தலைமை தேர்தல் ஆணையர்
தேர்தலில் பணப்பலத்தை கட்டுப்படுத்த சட்டங்கள் போதாது: தலைமை தேர்தல் ஆணையர்

தேர்தலில் பணப்பலத்தை கட்டுப்படுத்த தற்போதுள்ள சட்டங்கள் போதாது என தலைமைத் தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இந்திய தேர்தல் ஜனநாயகத்தின் முன் உள்ள சவால்கள் என்கிற தலைப்பில் பேசிய தலைமைத் தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத், ஜனாநாயம் சிறப்புடன் செயல்பட தைரியம், ஒருமைப்பாடு, அறிவு, நன்னடத்தை ஆகிய பண்புகளை தேவை என்றார். ஆனால் இப்போது அவை அழிந்து வருவதாகவும் வருத்தம் தெரிவித்தார்.

கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா போல தரவுகளை திருடி குறிப்பிட்டவர்களுக்கு ஆதரவான தகவல்களை பரப்புவது போன்ற செயல்கள் தேர்தல் நடைமுறைகளில் பெரிய சவாலாக இருக்கிறது என ஓம் பிரகாஷ் ராவத் கூறியுள்ளார். தேர்தலில் பணப்புழக்கம் குறித்து தொடர்ச்சியாக விவாதங்கள் நடந்தாலும், தற்போது நடைமுறையில் இருக்கும் சட்டங்கள் அவற்றை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் போதுமானதாக இல்லை என கூறியுள்ளார். இதற்காக கடுமையான ‌சட்டங்கள் தேவையும் என்றும், பல்வேறு சீர்திருத்தங்களை தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்திருப்பதாகவும் ஓ.பி.ராவத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com