ஆந்திராவில் மே 5 முதல் பிற்பகல் 12 மணியிலிருந்து ஊரடங்கு - ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு

ஆந்திராவில் மே 5 முதல் பிற்பகல் 12 மணியிலிருந்து ஊரடங்கு - ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு

ஆந்திராவில் மே 5 முதல் பிற்பகல் 12 மணியிலிருந்து ஊரடங்கு - ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு
Published on

ஆந்திர மாநிலத்தில் மே 5-ஆம் தேதி முதல் பிற்பகல் 12 மணியிலிருந்து ஊரடங்கு அறிவித்து முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

ஆந்திர மாநிலத்தில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருவதால் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அதில், மாநிலம் முழுவதும் வருகின்ற மே மாதம் 5ஆம் தேதி முதல் பிற்பகல் 12 மணியிலிருந்து ஊரடங்கு அமல்படுத்தப்படும் என ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். இந்த ஊரடங்கு இரண்டு வாரங்களுக்கு அமல்படுத்தப்படும் என்றும் அத்தியாவசிய சேவைகள் தவிர்த்து அனைத்து அலுவலகங்களும் மூடப்படும் என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com