இன்றிரவு முதல் முழு ஊரடங்கு; மும்பையிலிருந்து சாரைசாரையாக வெளியேறும் தொழிலாளர்கள்!

இன்றிரவு முதல் முழு ஊரடங்கு; மும்பையிலிருந்து சாரைசாரையாக வெளியேறும் தொழிலாளர்கள்!

இன்றிரவு முதல் முழு ஊரடங்கு; மும்பையிலிருந்து சாரைசாரையாக வெளியேறும் தொழிலாளர்கள்!
Published on

மகாராஷ்டிராவில் இன்றிரவு முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வருவதை அடுத்து, வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு படையெடுத்து செல்கின்றனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா இரண்டாவது அலை வீசி வருகிறது. குறிப்பாக மும்பையில் கொரோனா நோய் தொற்று அசுர வேகத்தில் பரவி வருகிறது. இந்த நிலையில் மகாராஷ்டிராவில்  கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் இன்று முதல் 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் ஏற்கனவே சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்களும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று முதல் (ஏப்ரல் 14) 30-ம் தேதி வரை வரை 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.

புதிய வழிகாட்டுதலின்படி அலுவலகங்கள், தொழிற்சாலைகள், பொது இடங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. உணவு, குடிநீர், மின்சாரம் வழங்கல், மருத்துவமனைகள், மருந்துக் கடைகள் ஆகிய இன்றியமையாச் சேவைகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளன. மளிகை, காய்கறி, பழக் கடைகள், பேக்கரி, பால் பொருட்கள் கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் இன்றிரவு முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வருவதை அடுத்து, வெளிமாநில தொழிலாளர்கள் மூட்டை, முடிச்சுகளுடன் சொந்த ஊருக்கு படையெடுத்து வருகின்றனர். லோகமான்ய திலக் ரயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் குவிந்தனர். பேருந்துகளில், சொந்த ஊர் செல்வதற்காக பேருந்து நிலையங்களில் கால்கடுக்க காத்துள்ளனர். ஒரு சில தொழிலாளர்கள், தனியார் வாகனங்களை வாடகைக்கு பிடித்து சொந்த ஊருக்கு சென்றுள்ளனர்.

கடந்தாண்டு ஊரடங்கின்போது கடும் துன்பங்களை அனுபவித்ததாகவும், அதுபோன்ற ஊரடங்கு தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளதால், மீண்டும் துயரத்தை சந்திக்காமல், முன்கூட்டியே சொந்த ஊருக்கு புறப்பட்டுச் செல்வதாகவும் வெளிமாநில தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா பரவல் அதிகரிப்பதன் காரணமாக பல்வேறு மாநிலங்களுக்கு இடையே இ-பாஸ் முறை அமலில் இருப்பதால் பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்படவில்லை என்றும் இதனால் தாங்கள் கடும் அவதிக்கு உள்ளாக இருப்பதாகவும் புலம்பெயர் தொழிலாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com