குப்பை இருக்கா....ஆப் மூலம் புகார் தெரிவிக்கலாம்
வரலாற்றுப் பெருமை கொண்ட நினைவுச் சின்னங்கள் உள்ள பகுதிகளில் குப்பைகள் தேங்கி இருந்தால் அது குறித்து புகார் தெரிவிக்க புதிய செயலி ஒன்றை மத்திய கலாச்சாரத்துறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஸ்வட்ச் பாரத் திட்டத்தின் ஒரு பகுதியாக வரலாற்று பெருமை கொண்ட நினைவு சின்னங்கள் உள்ள பகுதிகளில் தூய்மை பராமரிப்பு பணிகளில் குறைபாடுகள், குப்பைகள் தேக்கம் உள்ளிட்ட பிரச்சனைகள் இருப்பின், அவற்றை அங்கு வரும் சுற்றுலாப்பயணிகள் மற்றும் பார்வையாளர்கள் அரசுக்கு தெரியப்படுத்தும் வகையில், ஸ்வச் பாரத் ஆப் என்ற புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக டெல்லி தேசிய அருங்காட்சியகத்தில் இந்த வசதியை மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா அறிமுகம் செய்து வைத்தார். இந்த செயலியைத் தரவிறக்கம் செய்து அதன் மூலம் குப்பைகள் உள்ள இடங்களையும், தூய்மையற்றை இடங்களையும் புகைப்படங்கள் எடுத்து அதன் மூலமும் புகார் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.