briyani dhonipt desk
இந்தியா
”சிஎஸ்கே கோப்பையை தட்டித் தூக்கணும்” - புதுச்சேரியில் பிரியாணியில் தோனியின் படத்தை வடிவமைத்த ரசிகை!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிபெற வாழ்த்து தெரிவித்து புதுச்சேரியில் பெண் ஓவியர் ஒருவர் வித்தியாசமான முறையில் பிரியாணியில் தோனியின் படத்தை வடிவமைத்துள்ளார்.
புதுச்சேரி முருங்கப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஓவியர் அறிவழகி. பட்டதாரியான இவர், ஓவியம் மீது ஆர்வம் கொண்டுள்ளார். இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகையான இவர், ஏற்கனவே ரங்கோலியில் தோனியின் படத்தை வரைந்துள்ளார்.
artistpt desk
இந்நிலையில், சிஎஸ்கே மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டி இன்று இரவு நடைபெறவுள்ளது. இந்த இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிபெற வாழ்த்து தெரிவித்து வித்தியாசமான முறையில் பிரியாணியில் தோனியின் படத்தை தீட்டியுள்ளார். சிஎஸ்கே ரசிகர்கள் அவரை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.