\
Crude Oil Prices Surge 29%! A New Economic Challenge for India
petrol ANI

29% எகிறிய கச்சா எண்ணெய் விலை.. அதிகரிக்கும் ஆபத்து.. இந்திய பொருளாதாரத்திற்கு புதிய சவால்!

விலை உயர்வு காரணமாக பெட்ரோல், டீசல் விலைகளில் மாற்றம் ஏற்படும் வாய்ப்பு!
Published on: 

செய்தியாளர் : M. மீரா

இந்திய பொருளாதாரம் தொடர்ந்து வேகமாக வளர்ந்து வரும் நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை திடீரென அதிகரித்திருப்பது புதிய சவாலை உருவாக்கியுள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வும், அமெரிக்காவுடனான வர்த்தக உறவுகளில் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற தன்மையும் இந்திய பொருளாதாரத்திற்கு முக்கியமான ஆபத்துகளாக இருப்பதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

செப்டம்பர் மாதத்தில் இந்தியா பயன்படுத்தும் கச்சா எண்ணெயின் சராசரி விலை கணிசமாக உயர்ந்துள்ளது. பெட்ரோலியம் திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வு (PPAC) தரவுகளின்படி, ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பேரல் கச்சா எண்ணெயின் சராசரி விலை 90.19 டாலராக இருந்தது. செப்டம்பரில் இது 116.04 டாலராக உயர்ந்துள்ளது.

The drop in crude oil prices
The drop in crude oil prices Reuters

அதாவது, ஒரே மாதத்தில் ஒரு பேரலுக்கு 25.85 டாலர், சுமார் 28.66 சதவீதம் விலை அதிகரித்துள்ளது. செப்டம்பர் 29-ஆம் தேதி இந்திய கச்சா எண்ணெய் விலை 116.52 டாலராகவும் இருந்தது.

இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் பெரும்பகுதி வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. எனவே, சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை உயரும்போது, இந்தியாவின் இறக்குமதி செலவும் அதிகரிக்கும்.

இதனால் நாட்டின் வெளிநாட்டு செலவினம் அதிகரிப்பதுடன், ரூபாய் மதிப்பிலும் அழுத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும், பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் மட்டுமின்றி, போக்குவரத்து, சரக்கு லாரி கட்டணம், உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளின் செலவுகளும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் கூறுகிறது.

கச்சா எண்ணெய் விலை உயர்வு ஏற்கனவே உள்நாட்டில் விலைவாசி அழுத்தத்தை அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இருப்பினும், ஒட்டுமொத்த பணவீக்கம் தற்போது கட்டுக்குள் இருப்பதாகவும் கூறியுள்ளது.

petrol
petrol ANI

ஒருபுறம் எண்ணெய் விலை உயர்வு கவலை அளித்தாலும், இந்திய பொருளாதாரத்தின் அடிப்படை வளர்ச்சி வலுவாகவே உள்ளது.

2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் உண்மையான GDP வளர்ச்சி 7.8 சதவீதமாக இருந்தது. உற்பத்தி, கட்டுமானம் மற்றும் சேவைத் துறைகளும் நல்ல வளர்ச்சியை பதிவு செய்துள்ளன.

ஒருபுறம் எண்ணெய் விலை உயர்வு கவலை அளித்தாலும், இந்திய பொருளாதாரத்தின் அடிப்படை வளர்ச்சி வலுவாகவே உள்ளது.

2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் உண்மையான GDP வளர்ச்சி 7.8 சதவீதமாக இருந்தது. உற்பத்தி, கட்டுமானம் மற்றும் சேவைத் துறைகளும் நல்ல வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. குறிப்பாக உற்பத்தித் துறை 9.2 சதவீதமும், நிதி, ரியல் எஸ்டேட், தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்முறை சேவைகள் 12.1 சதவீதமும் வளர்ச்சி கண்டுள்ளன.

கச்சா எண்ணெய் விலையைத் தவிர, அமெரிக்காவுடனான வர்த்தக உறவுகளில் நிலவும் நிச்சயமற்ற தன்மையும் இந்தியாவுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு எதிராக அதிகபட்சம் 100 சதவீதம் வரை வரி விதிக்க அமெரிக்க அதிபருக்கு அதிகாரம் வழங்கும் மசோதா தொடர்பான விவாதமும் புதிய நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளது.

அதனால், வலுவான உள்நாட்டு வளர்ச்சி இருந்தாலும், கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் உலக வர்த்தக நிச்சயமற்ற தன்மை இந்திய பொருளாதாரத்திற்கு முக்கிய சோதனைகளாக மாறியுள்ளன.

Crude Oil Prices Surge 29%! A New Economic Challenge for India
நாளை யுபிஐ சேவை நிறுத்தம்.. வணிகர் சங்கங்களின் பேரவை அறிவிப்பு!!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com