இந்தியா
சிகிச்சைக்காக இளம் பெண்ணை 7 கி.மீ.தோளில் சுமந்து சென்ற சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்
சிகிச்சைக்காக இளம் பெண்ணை 7 கி.மீ.தோளில் சுமந்து சென்ற சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்
சத்தீஸ்கர் அருகே போதிய வசதி இல்லாத காரணத்தால், காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண்ணை வனத்துறையினர் 7 கிலோ மீட்டர் தூரம் தோளில் சுமந்து சென்று மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள வனப்பகுதிகள் நிறைந்த இடத்தில் இளம் பெண் ஒருவர் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். அந்த பகுதியில் போதிய வசதிகள் இல்லாததால், அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முடியவில்லை. இதனால், அவரது நிலைமை மோசமாகவே காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண்ணை மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் தோளில் சுமந்து சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர். மொத்தம் 7 கிலோ மீட்டர் தூரம் அந்தப் பெண்ணை வீரர்கள் தோளில் சுமந்து சென்றனர். இந்த சம்பவம் அனைவரையும் நெகிழ செய்துள்ளது.