சிஆர்பிஎஃப் இன்ஸ்பெக்டரை சுட்டுக் கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட எஸ்.ஐ
டெல்லியில் சிஆர்பிஎஃப் பிரிவை சேர்ந்த ஆய்வாளரை சுட்டுக் கொன்றுவிட்டு எஸ்.ஐ தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் உத்தம்பூரை சேர்ந்தவர் கர்னெல் சிங். இவர் சிஆர்பிஎஃப் பிரிவில் உதவி ஆய்வாளராக இருந்துள்ளார். ஹரியானாவின் ரோஹ்தக் பகுதியைச் சேர்ந்தவர் தஷ்ரத் சிங். இவர் சிஆர்பிஎஃப் பிரிவில் ஆய்வாளராக இருந்துள்ளார்.
டெல்லி லோதி எஸ்டேட்டில் உள்துறை அமைச்சகத்திற்கு ஒதுக்கப்பட்ட பங்களாவில் நேற்று இரவு 10.30 மணியளவில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதால் ஆய்வாளர் தஷ்ரத் சிங்கை கொன்று விட்டு எஸ்.ஐ. கர்னல் சிங் தற்கொலை செய்து கொண்டதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த துணை ராணுவப்படையின் மூத்த அதிகாரிகள் மற்றும் உள்ளூர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

