\
ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சிறுமியை காப்பாற்றிய சிஆர்பிஎஃப் வீரர்கள்

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சிறுமியை காப்பாற்றிய சிஆர்பிஎஃப் வீரர்கள்

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சிறுமியை காப்பாற்றிய சிஆர்பிஎஃப் வீரர்கள்
Published on: 

ஜம்மு காஷ்மீரில் உள்ள ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சிறுமியை சிஆர்பிஎஃப் வீரர்கள் காப்பாற்றியுள்ளனர். 

வடகிழக்கு, வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மழையால் ஆறுகளில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்வதால் அங்குள்ள ஆறுகளும் நிரம்பியுள்ளன.

இந்நிலையில் பாராமுல்லா மாவட்டத்தில் உள்ள டாங்க்மார்க் (TANGMARG) நகரில் பாயும் ஜீலம் நதியிலும் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் வெள்ளத்தில் சிறுமி ஒருவர் அடித்துச் செல்லப்பட்டார். ஆற்றினுள் சிறுமியைக் கண்ட அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த சிஆர்பிஎஃப் வீரர்கள், ஆற்றில் குதித்து சிறுமியை பத்திரமாக மீட்டனர்.

ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்ட வீடியோவை பலரும் ஷேர் செய்து சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com