3 வருட சிகிச்சைக்குப் பின் நாட்டு பணிக்கு திரும்பிய சிஆர்பிஎஃப் வீரர் 

3 வருட சிகிச்சைக்குப் பின் நாட்டு பணிக்கு திரும்பிய சிஆர்பிஎஃப் வீரர் 

3 வருட சிகிச்சைக்குப் பின் நாட்டு பணிக்கு திரும்பிய சிஆர்பிஎஃப் வீரர் 

8 தோட்டாக்களை உடலில் வாங்கிய சிஆர்பிஎஃப் வீரர் 3 வருட சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் நாட்டுக்காக பணியை தொடங்கியுள்ளார்.

2016ம் ஆண்டு ஜூன் மாதம் சிஆர்பிஎஃப் வீரரான அஹமத் உள்ளிட்ட பல வீரர்கள் துப்பாக்கிப் பயிற்சி முடித்துக்கொண்டு திரும்பிக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த 4 தீவிரவாதிகள் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தத் திடீர் தாக்குதலில் 8 சிஆர்பிஎஃப் உயிரிழந்தனர். 

பல வீரர்கள் படுகாயமடைந்தனர். சிஆர்பிஎஃப் வீரரான அஹமத் தனது உடலில் 8 தோட்டக்களை உள்வாங்கிக் கொண்டு உயிருக்காகப் போராடினார். உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் இரண்டு மாதங்கள் கோமா நிலையிலேயே இருந்தார். பின்னர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த அவர் மெல்ல மெல்ல மீண்டார். 

தீவிர சிகிச்சையாலும் தன்னம்பிக்கையாலும் மீண்ட அஹமத், தற்போது எழுந்து நடக்கும் அளவுக்கு முன்னேறினார். தற்போது அவர் மீண்டும் நாட்டுக்காக பணியாற்ற தொடங்கியுள்ளார். அஹமத்தின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு ராணுவ அலுவலகப் பணி அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

தான் மீண்டு வர தனது குடும்பமும் மத்திய அரசும் தனக்கு பெரிய அளவில் உதவி செய்ததாக தெரிவித்துள்ள அஹமத், ஜம்மு - காஷ்மீர் அரசு தனக்கு எந்த உதவியும் செய்யவில்லை எனக் குற்றஞ்சாட்டியுள்ளார். எதிர்காலத்தில் நான் மாநில எல்லைக்குள் தாக்கப்பட்டாலாவது மாநில அரசு உதவ வேண்டுமென தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com