முதலை கடிச்சதால் கையும் போச்சு.....வழக்கும் பதிவாச்சு...

முதலை கடிச்சதால் கையும் போச்சு.....வழக்கும் பதிவாச்சு...

முதலை கடிச்சதால் கையும் போச்சு.....வழக்கும் பதிவாச்சு...
Published on

பெங்களூரைச் சேர்ந்த ஐஐடி மாணவர் ஒருவர் வனப்பகுதியில் சுற்றுலாவுக்கு சென்ற போது அவரின் கையை முதலை ஒன்று கடித்து குதறியது. 

ஐஐடி மாணவரான முடிட் தண்வாடே பெங்களூருவில் புதிய நிறுவனம் ஒன்றை தொடங்கி அதனை நிர்வாகித்து வருகிறார். 26 வயதான இவர் விடுமுறை நாட்களில் வனப்பகுதிகளுக்கு சென்று நேரத்தை கழிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் பெங்களூருவில் தடை செய்யப்பட்ட வனப்பகுதிக்குள் சட்டவிரோதமாக சுற்றுலா சென்ற தண்வாடே, அங்குள்ள நீர்நிலைகளில் நேரத்தை கழித்துள்ளார். தனது நண்பர்கள் மற்றும் இரண்டு நாய்களுடனும் சென்ற அவர் நீர்நிலையில் விளையாடிக்கொண்டிருந்த போது, திடீரென நீரிலிருந்து வெளியே வந்த முதலை ஒன்று அவரின் இடது கையை கவ்வியது. வலியால் துடித்த தண்வாடே-வை, நீண்ட நேர போராட்டத்திற்கு பின் முதலையிடமிருந்து அவரது நண்பர்கள் காப்பாற்றினர். இந்த தாக்குதலில் தண்வாடே தனது இடது கையை முழுமையாக இழந்தார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே சட்டவிரோதமாக வனப்பகுதிக்குள் நுழைந்த முடிட் தண்வாடே மீது பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர் கண் விழித்ததும் அவரிடம் போலீசார் விசாரணை நடத்துவார்கள் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com