"பேச்சுரிமையை பறிக்க தேசதுரோக தடுப்பு சட்டம் பயன்படுத்தப்படுகிறது"- நீதிபதி தீபக் குப்தா

"பேச்சுரிமையை பறிக்க தேசதுரோக தடுப்பு சட்டம் பயன்படுத்தப்படுகிறது"- நீதிபதி தீபக் குப்தா
"பேச்சுரிமையை பறிக்க தேசதுரோக தடுப்பு சட்டம் பயன்படுத்தப்படுகிறது"- நீதிபதி தீபக் குப்தா

அண்மை காலங்களில் நாட்டில் பேச்சுரிமையை பறிப்பதற்கு தேசதுரோக சட்டத்தை பயன்படுத்தப்படுவது அதிகரித்து வருவதாக உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா அதிருப்தி தெரிவித்துள்ளார்.

குஜராத்தின் அகமதாபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தேசத்துரோக சட்டம் மற்றும் கருத்து சுதந்திரம் குறித்து உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “பெரும்பான்மையின் கருத்து எப்போதும் சட்டமாக்கிவிட முடியாது. சிறுபான்மை மக்களுக்கும் கருத்து தெரிவிக்கும் உரிமை உள்ளது. தேர்தலில் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் அரசு அனைத்து மக்களின் கருத்தை பெற்றது என்று கூற முடியாது. ஏனென்றால் தேர்தலில் பெரும்பான்மை பெறும் கட்சி 50 சதவிகித வாக்குகளை பெறுவதில்லை. அத்துடன் மாற்று கருத்து தெரிவிப்பவர்களை தேசவிரோதிகள் என குறிப்பிடும் போக்கு அதிகரித்து வருவதாக கவலையளிக்கிறது. 

சமூக வலைதளங்களில் மாற்றுக் கருத்து தெரிவிப்பவர்களை கேலி செய்யும் போக்கு அதிகரித்து வருவதால், மக்கள் தங்கள் கருத்துகளை சுதந்திரமாக தெரிவிக்க அச்சப்படுகின்றனர். மாற்று கருத்து தெரிவிக்கும் உரிமை அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள மிக முக்கிய உரிமை. ஒரு நபர் சட்டத்தை மீறாமல், வன்முறையை தூண்டாமல் மாற்று கருத்தை தெரிவிக்கவும், அதை பரப்பவும் அனைத்து உரிமையும் உள்ளது. 

தேச துரோக சட்டங்கள் வெளிநாட்டினர் ஆட்சியின் போது அறிமுகப்படுத்தப்பட்டதை நினைவுகூர்ந்த குப்தா, அந்த ஆட்சியாளர்கள் கருத்து சுதந்திரத்தை பறிப்பதற்காகவே இந்த சட்டங்களை கொண்டுவந்தது. அரசியல் தலைவர்களை விமர்சிப்பது அவதூறு ஆகுமே தவிர தேசதுரோகம் ஆகாது” எனத் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com