இவர்களையெல்லாம் இணையத்தில் தேடும் போது கவனம் தேவை - எச்சரிக்கை விடுக்கும் ஆய்வு
ரொனால்டோ, தபு, டாப்ஸி, அனுஷ்கா ஷர்மா குறித்த தகவல்களை ஆன்லைனில் தேடுபவரா நீங்கள்?
பிரபலங்களின் பெயர்களை ஆன்லைனில் தேடும்போது, அது தொடர்பாக தேடலில் காட்டப்படும் சில லிங்குகள் சில நேரங்களில், பயனாளர்களை பாதுகாப்பற்ற சில இணையதளங்களுக்கு கொண்டு சென்று அவர்களது சுய தகவல்கள் தவறான நோக்கத்திற்காக சுரண்டப்படுகின்றன.
இந்நிலையில் மெக்காஃபி (McAfee) என்ற கணினி பாதுகாப்பு மென்பொருள் நிறுவனம், இது தொடர்பாக ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. மெக்காஃபியின் சமீபத்திய 2020-ன் மிக ஆபத்தான பிரபலங்களின் பட்டியலில் பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ முதலிடத்தில் உள்ளார். நடிகைகள் தபு, டாப்ஸி பன்னு, அனுஷ்கா சர்மா, சோனாக்ஷி சின்ஹா ஆகியோரும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
2020- மெக்காஃபியின் மிகவும் ஆபத்தான பிரபலங்களின் பட்டியல்:-
- கிறிஸ்டியானோ ரொனால்டோ
- தபு
- டாப்ஸி பன்னு
- அனுஷ்கா சர்மா
- சோனாக்ஷி சின்ஹா
- பாடகர் அர்மான் மாலிக்
- சாரா அலிகான்
- கங்கனா ரனாத்
- திவ்யங்கா திரிபாதி
- ஷாருக் கான்
எனவே இணையத்தில் மேற்கண்ட பிரபலங்களை குறித்த தகவல்களை தேடும் போது மிக கவனமாக இருக்க வேண்டும் என மெக்காஃபி தெரிவித்துள்ளது.