''வாக்கு வங்கிக்காகவே முத்தலாக் தடைக்கு எதிர்ப்பு'' - காங்கிரஸ் கட்சி மீது அமித்ஷா சாடல்

''வாக்கு வங்கிக்காகவே முத்தலாக் தடைக்கு எதிர்ப்பு'' - காங்கிரஸ் கட்சி மீது அமித்ஷா சாடல்
''வாக்கு வங்கிக்காகவே முத்தலாக் தடைக்கு எதிர்ப்பு'' - காங்கிரஸ் கட்சி மீது அமித்ஷா சாடல்

வாக்கு வங்கிக்காகவே முத்தலாக் சட்டத்தை காங்கிரஸ் வலுவாக எதிர்க்கிறது என பாரதிய ஜனதா தலைவர் அமித்ஷா குற்றம்சாட்டியுள்ளார்.

"முத்தலாக் முறை நீக்கலும், வரலாற்று பிழை சரி செய்தலும்" என்ற தலைப்பில் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பில் டெல்லியில் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் பங்கேற்ற பாரதிய ஜனதா தலைவர் அமித்ஷா, உடன்கட்டை ஏறும் முறையை நீக்கியபோது, யாரும் அதற்கு எதிராக குரல் கொடுக்கவில்லை, அதே போல் குழந்தை திருமணத்துக்கு முடிவு கட்டியபோதும், எதிர்ப்பு எழவில்லை, வரதட்சணை கொடுமையை தடுக்க சிறை தண்டனை விதிக்கப்பட்டதற்கும் வரவேற்பே எழுந்தது என பேசினார். 

ஆனால், முத்தலாக் முறைக்கு மட்டும் தடை கொண்டு வரப்பட்டால், வாக்கு வங்கிக்காக காங்கிரஸ் அதை கடுமையாக எதிர்க்கிறது என்றும், இது வெட்கக்கேடான செயல் என்றும் அமித்ஷா சாடினார். மேலும், ஒருசாரரை திருப்திபடுத்தும் அரசியல் காலங்காலமாக தொடர்ந்ததாலேயே முத்தலாக் முறை ஒழிக்கப்படவில்லை என்றும் அமித்ஷா தெரிவித்தார்.
 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com