\
Crimes Against Girls Rise 4X in India, Low Conviction Rate
POCSO X

10 ஆண்டுகளில் 4 மடங்கு அதிகரித்த போக்சோ வழக்குகள்.. தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அதிர்ச்சி தகவல்!!

இந்தியாவில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் கடந்த 10 ஆண்டுகளில் 4 மடங்கு அதிகரித்துள்ளதாகவும், மிகக் குறைந்த அளிவிலேயே தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
Published on: 

போக்சோ போன்ற கடுமையான சட்டங்கள் நடைமுறையில் இருந்தும், இந்தியாவில் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2015ஆம் ஆண்டில் 10 ஆயிரத்து 934 சிறுமிகள் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட நிலையில், 2024ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 43 ஆயிரத்து 675 ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக கடந்த 2020 ஆண்டு முதல் 2024 ஆண்டு வரை மட்டும் சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட சிறுமிகள் பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கிறது.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமைX

இதில் பெரும்பான்மையானவை அதாவது 1 லட்சத்து 83 ஆயிரத்து 372 வழக்குகள் பாலியல் வன்கொடுமை குற்றங்களாகும். பாதிக்கப்பட்டவர்களில் கிட்டத்தட்ட 90 சதவீதம் பேர் 12 முதல் 18 வயதிற்குட்பட்டவர்கள். அதிலும் 16 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுமிகளே மிக அதிக ஆபத்தை எதிர்கொள்வதாகக் கூறப்படுகிறது. அதேபோல் 6 வயதிற்குட்பட்ட 3 ஆயிரத்து 600 பச்சிளம் குழந்தைகளும் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பக தரவுகள் தெரிவிக்கின்றன. அதில் 97 சதவீத குற்றங்கள் நன்கு அறிமுகமானவர்களாலேயே ஏற்பட்டுள்ளன. நண்பர்கள் மற்றும் காதலர்களால் 50.9 சதவீதமும், உறவினர்கள் மற்றும் அண்டை வீட்டார்களால் 37.6 சதவீதமும், குடும்ப உறுப்பினர்களால் 8.2 சதவீத குற்றங்களும் நடைபெற்றுள்ளன.

Crimes Against Girls Rise 4X in India, Low Conviction Rate
பணம் இல்லையா.. பரவாயில்லை.. வருமானத்துக்கு ஏற்ப மருத்துவக் கட்டணம் ; கவனம் ஈர்க்கும் மருத்துவர்!!

அறியப்படாத நபர்களால் நடக்கும் குற்றங்கள் வெறும் 3.3 சதவீதம் மட்டுமே. மாநிலங்களைப் பொறுத்தவரை, ஒரு லட்சம் மக்கள் தொகைக்கான குற்ற விகிதத்தில் 20.4 சதவீதத்துடன் மேகாலயாவும், 16.4 சதவீதத்துடன் சிக்கிமும் , 16.1 சதவீதத்துடன் மிசோரமும் முன்னிலையில் உள்ளன. இதைத் தொடர்ந்து தமிழ்நாடு 13.6 சதவீத குற்ற விகிதத்துடன் 4ஆவது இடத்தில் உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றங்களை தடுக்க போக்சோ நீதிமன்றங்கள் அமைக்கப்பட்ட போதிலும் சுமார் 89.5 சதவீத வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன.

கோப்புபடம்
கோப்புபடம்pt web

குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைக்கும் விகிதம் வெறும் 32.3 சதவீதமாகவும் 70 சதவீதத்துக்கும் அதிகமான வழக்குகள் தண்டனையின்றி முடிவதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன. விழிப்புணர்வு மற்றும் வழக்குப்பதிவு செய்யும் நடைமுறைகள் எளிதாக்கப்பட்டிருப்பது புள்ளிவிவர உயர்வுக்கு காரணமாக இருந்தாலும், குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனையை உறுதி செய்தால் மட்டுமே சிறுமிகளின் பாதுகாப்பை முழுமையாக உறுதி செய்ய முடியும்.

Crimes Against Girls Rise 4X in India, Low Conviction Rate
அஸாம்: இஸ்லாமிய திருமணங்களை பதிவு செய்வது கட்டாயம்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com