“தோனிக்கு கிரிக்கெட் முக்கியம், எனக்கு அவர் தான் முக்கியம்” - சாக்ஷி தோனி

“தோனிக்கு கிரிக்கெட் முக்கியம், எனக்கு அவர் தான் முக்கியம்” - சாக்ஷி தோனி
“தோனிக்கு கிரிக்கெட் முக்கியம், எனக்கு அவர் தான் முக்கியம்” - சாக்ஷி தோனி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மகேந்திர சிங் தோனியின் மனைவி சாக்ஷி தோனி நேற்று தனது 32வது பிறந்தநாளை கொண்டாடினார். அந்த கொண்டாட்டத்தின் போது அவருடன் தோனியும், மகள் ஷிவாவும் இருந்தனர். அந்த படங்களை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில் சாக்ஷி ஷேர் செய்திருந்தார். 

அதையடுத்து தனது பிறந்தநாளை கொண்டாடிய கையோடு அவர் பேசியிருந்த வீடியோ ஒன்றை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பகிர்ந்துள்ளது. அந்த வீடியோ வைரலாகி உள்ள நிலையில் சாக்ஷி தில் தெரிவித்தது…

“எப்போதுமே சாந்தமாக இருக்கும் தோனியை என்னால் மட்டுமே அப்செட் செய்ய முடியும். நான் அவருக்கு நெருக்கமானவளாக இருப்பதால் அதை செய்ய முடிகிறது என நினைக்கிறேன். வீட்டில் நாங்கள் இருவரும் கிரிக்கெட் குறித்து பேசி கொள்ளவே மாட்டோம். நான் கிரிக்கெட் குறித்து அதிகம் அவரிடம் கேட்டுக் கொள்ள மாட்டேன். 

அதே போல எங்கள் மகள் ஷிவாவுக்கு தந்தையின் சொல்லே வேத வாக்கு. நாங்கள் எல்லோரும் அவளை சாப்பிட வேண்டி கொண்டிருக்கும் போது தோனி ஒருமுறை ‘சாப்பிடு’ என சொன்னால் போதும். அடுத்த நொடியே அதை முடித்து  விடுவாள். அவரது நீளமான ஹேர் ஸ்டைல் எனக்கு பிடிக்கவே பிடிக்காது. உலக கோப்பை நெருக்கத்தில் தான் ஷிவா பிறந்திருந்தாள். அவளை பார்க்க அவர் வரவே இல்லை. அனைவரும் ‘ உன் கணவர் எங்கே?’ என என்னைக் கேட்டனர். இருந்தாலும் எனக்கு அது பெரிய விஷயமாகவே படவில்லை.

தோனிக்கு கிரிக்கெட் முக்கியம், எனக்கு அவர் தான் முக்கியம்” என அந்த வீடியோவில் சாக்ஷி சொல்லியுள்ளார். 

இருவருக்கும் கடந்த 2010 இல் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com