கிரெடிட் கார்டு ட்யூ நினைச்சு இனி கவலை வேண்டாம்.. RBI-ன் அசத்தலான அறிவிப்பு என்ன தெரியுமா?

கிரெடிட் கார்டு ட்யூ நினைச்சு இனி கவலை வேண்டாம்.. RBI-ன் அசத்தலான அறிவிப்பு என்ன தெரியுமா?
கிரெடிட் கார்டு ட்யூ நினைச்சு இனி கவலை வேண்டாம்.. RBI-ன் அசத்தலான அறிவிப்பு என்ன தெரியுமா?

ஒன்றுக்கும் மேற்பட்ட கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு EMI கட்டும் போது படும் சிரமம் சொல்லில் அடங்காது. தவணை தேதி தாண்டி விட்டால் போதும் அபராதத்தோடு சேர்த்து கட்ட வேண்டிதாகிவிடும். இதனால் ஒவ்வொரு மாதமும் தவணைதாரர்கள் சந்திக்கும் இந்த மாதிரியான சிரமத்தை போக்கும் வகையில் ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பு பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

அதன்படி கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு - வழங்குதல் மற்றும் நடத்தை வழிமுறைகளின்படி ரிசர்வ் வங்கியின் கடந்த ஏப்ரல் 21ம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கையில் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அதில், “கிரெடிட் கார்டு தவணை கட்டவேண்டிய தேதியில் கட்ட மறந்துவிட்டால் அதற்காக அடுத்த மூன்று நாட்கள் அவகாசம் கொடுக்கப்படும்.

அந்த மூன்று நாட்களில் EMI கட்டினால் தாமதமாக கட்டியதற்கான எந்த அபராதமும் வசூலிக்கப்படாது என்றும், குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தவணை கட்டணங்களை நீங்கள் கட்டிவிட்டால் உங்கள் கிரெடிட் ஸ்கோரும் பாதிக்கப்படாது. ஆனால் அந்த கூடுதல் மூன்று நாட்கள் கழித்து கட்டினால் தாமதமாக கட்டியதற்கான கட்டணம் விதிக்கப்படும்.

இதனால் அடுத்த பில்லிங் சுழற்சியில் பொதுவாக தாமதக் கட்டணம் அடங்கும். இந்த தாமதமாக செலுத்தும் அபராதங்களின் அளவு வங்கிகள் அல்லது கிரெடிட் கார்டு நிறுவனங்களால் தீர்மானிக்கப்படுகிறது.” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com