இதுவும் 'Pre-wedding Shoot'தான்... ஆனால், காதலுடன் உழைப்பின் உன்னதம் பேசும் படங்கள்!

இதுவும் 'Pre-wedding Shoot'தான்... ஆனால், காதலுடன் உழைப்பின் உன்னதம் பேசும் படங்கள்!
இதுவும் 'Pre-wedding Shoot'தான்... ஆனால், காதலுடன் உழைப்பின் உன்னதம் பேசும் படங்கள்!

வித்தியாசமான தீமில் ப்ரீ வெட்டிங் போட்டோஷூட் நடத்தி சமூக ஊடங்களில் பலரின் பாராட்டையும் பெற்றுள்ளனர் கேரளாவைச் சேர்ந்த தம்பதியர்.  

திருமணம் என்றாலே மகிழ்ச்சிதான். வாழ்க்கையின் மறக்கமுடியாத அந்த தருணங்களை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்துவைத்து காலந்தோறும் கண்டுமகிழ்வது நம் வழக்கமாகிவிட்டது. சமீப காலங்களில் திருமணத்திற்கு முன்பு, பின்பு என பல போட்டோ ஷூட்களை திருமண தம்பதியர் எடுத்துவருகின்றனர். அதிலும் பல தீம்களை வைத்து ப்ரீ வெட்டிங் போட்டோஷூட் நடத்துவது நம் வழக்கமாகி விட்டது.

தற்போது சமூக ஊடங்களில் ப்ரீ வெட்டிங் போட்டோக்களை பலரும் அப்லோட் செய்கின்றனர். அவை பெரும்பாலும், க்ளாமராகவும், மாடர்னாகவும்தான் இருக்கும். அதற்கு மாற்றாக செய்யும் தொழிலுக்கு மரியாதை செலுத்தும் வகையில் கேரளாவைச் சேர்ந்த சமீபத்தில் திருமணமாக தம்பதி ஒன்று தங்கள் ப்ரீ வெட்டிங் போட்டோக்களை சமூக ஊடங்களில் பகிர்ந்துள்ளனர்.

உழைப்பாளர்களுக்கும், ஆண்- பெண் இருவரும் ஒன்றுசேர்ந்து உழைக்கவேண்டும் என்பதை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த போட்டோஷூட் சமூக ஊடகங்களில் பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளதுடன், பலரின் பாராட்டுக்களையும் பெற்றுவருகிறது.

புகைப்படம்: Athreya wedding stories 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com