\
தலைஒட்டி பிறந்த குழந்தைகள் நீண்ட அறுவை சிகிச்சைக்குப் பின் பிரிப்பு

தலைஒட்டி பிறந்த குழந்தைகள் நீண்ட அறுவை சிகிச்சைக்குப் பின் பிரிப்பு

தலைஒட்டி பிறந்த குழந்தைகள் நீண்ட அறுவை சிகிச்சைக்குப் பின் பிரிப்பு
Published on

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 11 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பின்னர் தலை ஓட்டிப் பிறந்த இரட்டைச் சகோதர்கள் தனித் தனியாகப் பிரிக்கப்பட்டனர். 

ஒடிசா மாநிலம் கந்தாமல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஜகா - கலியா சகோதர்கள். இவர்கள் தலையொட்டி பிறந்த இரட்டையர்கள். இரண்டரை வயதுடைய இந்த சகோதர்களை டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் 11 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பின்னர் வெற்றிகரமாக தனித்தனியாக பிரித்தனர். இரண்டம் கட்டமாக நடந்த இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாகவும் சகோதர்கள் இருவரும் மயக்க நிலையில் உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். இந்த அறுவை சிகிச்சை பல்வேறு துறையில் கைதேர்ந்த டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் 30 மருத்துவர்கள் கொண்ட குழுவால் நடத்தப்பட்டது. 

கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த இரட்டை சகோதர்களுக்கு முதல் கட்ட அறுவை சிகிச்சை ஜப்பான் மருத்துவர்களால் நடத்தப்பட்டது. அதில் முதன் முறையாக புதிய முறையில் பைபாஸ் அறுவை சிகிச்சை கையாளப்பட்டது. அதனை தொடர்ந்து நேற்று 11 மணி நேரம்  நடத்தப்பட்ட இரண்டாம் கட்ட அறுவை சிகிச்சையில் சகோதர்கள் தனித்தனியாக பிரிக்கப்பட்டனர். இந்நிலையில் இந்த சகோதர்களுக்கு முக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்பதால் தொடர்ந்து மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளனர். இது போன்ற கடினமான அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்திருப்பது தங்களுக்கு பூரிப்பாக உள்ளது என டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த இரட்டையர்களின் அறுவை சிகிச்சைக்கு ஒடிசா அரசாங்கம் 1 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com