மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம்புதிய தலைமுறை

தீவிர சிகிச்சையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி!

எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் உடல்நிலை மோசமாக உள்ளதாக தகவல் வெளியாகி வந்துள்ளது.
Published on

எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் உடல்நிலை மோசமாக உள்ளதாக தகவல் வெளியாகி வந்துள்ளது.

72 வயதாகும் சீதாராம் யெச்சூரி கடந்த 19ஆம் தேதி சுவாச பிரச்னை காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதலில் அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் பின்னர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். மருத்துக்குழு அவரை பரிசோதித்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், அவரது உடல்நிலை மோசமடைந்ததால், யெச்சூரிக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம்
இந்திய அளவில் அதிகளவில் வருமான வரி செலுத்திய பிரபலங்கள்.. பாலிவுட்டுக்கே டஃப் கொடுத்த நடிகர் விஜய்!

அவரது உடல்நிலை குறித்து மருத்துவக்குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. சமீபத்தில் அவருக்கு கண்புரை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com