“பசு மாட்டின் சிறுநீர் என் புற்றுநோயை குணப்படுத்தியது”- சாத்வி பிரக்யா

“பசு மாட்டின் சிறுநீர் என் புற்றுநோயை குணப்படுத்தியது”- சாத்வி பிரக்யா
“பசு மாட்டின் சிறுநீர் என் புற்றுநோயை குணப்படுத்தியது”- சாத்வி பிரக்யா

மாட்டு சிறுநீர் தன் மார்பக புற்றுநோயை குணப்படுத்த உதவியதாக பாஜக வேட்பாளர் சாத்வி பிரக்யா தெரிவித்துள்ளார்.

போபால் மக்களவை தொகுதி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளவர் சாத்வி பிரக்யா. இவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்த நிலையில் பல்வேறு விஷங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அதாவது தற்போது மாடுகள் குறித்த சர்ச்சை நிலவி வரும் நிலையில் அதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த சாத்வி பிரக்யா, “ மாடுகள் பல இடங்களில் நடத்தப்படும் விதம் வருத்தம் அளிக்கும் வகையில் உள்ளது. உண்மையில் மாடுகள் மற்றும் மாடுகள் சார்ந்த தயாரிப்புகளில் நிறைய நன்மைகள் உள்ளன. அதில் பெரிய விஷயம் என்னவென்றால், மாட்டின் சிறுநீரை அருந்தியதின் மூலம் என் மார்பக புற்றுநோய் குணமாகியது.

நான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தேன். மாட்டு சிறுநீரை அருந்தியதன் மூலம் என் புற்றுநோயை நானே குணப்படுத்திக் கொண்டேன். அத்துடன் மாடுகள் இரத்த அழுத்தம் குறையவும் நல்ல தீர்வாக உள்ளது. உதாரணத்திற்கு மாட்டின் பின்புறத்திலிருந்து அதன்முன்புறம் வரை நீங்கள் தடவிக்கொடுக்கும்பட்சத்தில், உங்களுக்கே ஒரு மகிழ்ச்சி கிடைக்கும். மாடுகளும் அந்த மகிழ்ச்சியை உணரும். அதேசமயம் விலங்குகளின் கழுத்திலிருந்து பின்பக்கம் வரை, தேய்த்து கொடுக்கும்போது அது சஞ்சலத்துடன் உணர்கிறது. எனவே மாட்டின் பின்புறத்திலிருந்து கழுத்து வரை தடவி கொடுக்கும்போது, நம் இரத்த அழுத்தம் கட்டக்குள் வருகிறது” என கூறியுள்ளார்.

கடந்த 2006-ம் ஆண்டு நடந்த மலேகான் குண்டுவெடிப்பு குற்றச்சாட்டில் சிக்கி இருந்த சாத்வி பிரக்யா தாக்கூர் தற்போது ஜாமீனில் உள்ளார். இந்நிலையில் தற்போது போபால் மக்களவைத் தொகுதி வேட்பாளராக பாஜக சார்பில் சாத்வி பிரக்யா அறிவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com