இறைச்சிக்காக மாடுகள் விற்பனை செய்ய மத்திய அரசு தடை விதித்ததையடுத்து, ஓ.எல்.எக்ஸ் போன்ற ஆன்லைன் சந்தைகளில் மாடுகள் விற்பனைக்கான விளம்பரங்கள் அளிக்கப்படுவது அதிகரித்து வருகிறது.
நாடு முழுவதும் இனி இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்யக்கூடாது என மத்திய அரசு தடை விதித்தது. இது மக்களின் உணவுப் பழக்கங்கள் மீதான தாக்குதல் எனவும் பாஜகவின் மத ரீதியான தாக்குதல் எனவும் நாடு முழுவதும், பல அரசியல் கட்சிகள், அமைப்புத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், கால்நடைகளை விற்கும் நபர்கள், டிஜிட்டல் இந்தியாவின் வழியில் மாடுகளை விற்கத் தொடங்கியுள்ளனர்.
ரூ.10 ஆயிரம் முதல் ரூ.3 லட்சம் மதிப்பிலான நூற்றுக்கணக்கான மாடுகள் வரை, OLX போன்ற ஆன்லைன் சந்தைகளில் விற்பனைக்காக விளம்பரங்கள் அளிக்கப்படுகின்றன. ஏற்கனவே பெட்ஸ் என்னும் பிரிவில் OLX மற்றும் க்விக்கர் ஆன்லைன் சந்தைகளில் கால்நடைகள் விற்கப்பட்டிருந்தாலும், மத்திய அரசின் இந்தத் தடைக்கு பிறகு இத்தகைய ஆன்லைன் விளம்பரங்கள் அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.