"பசுக்கள் எங்கள் தாய்; விரைவில் பசு பாதுகாப்பு மசோதா!" - அசாம் முதல்வர் உறுதி

"பசுக்கள் எங்கள் தாய்; விரைவில் பசு பாதுகாப்பு மசோதா!" - அசாம் முதல்வர் உறுதி
"பசுக்கள் எங்கள் தாய்; விரைவில் பசு பாதுகாப்பு மசோதா!" - அசாம் முதல்வர் உறுதி

அசாம் மாநிலத்தில் விரைவில் பசு பாதுகாப்பு மசோதா அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா அறிவித்திருக்கிறார்.

அசாமில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மிக எளிதில் தனிப்பெரும்பான்மையை வசப்படுத்தி மீண்டும் தனது தலைமையில் ஆட்சி அமைத்துள்ளது பாரதிய ஜனதா கட்சி. இதையடுத்து அசாமின் புதிய முதல்வராக பதவியேற்றுக் கொண்டார், ஹிமாந்தா பிஸ்வா சர்மா. இதற்கிடையே, 15 வது அசாம் சட்டமன்றத்தின் முதல் அமர்வின் கடைசி நாளான இன்று சட்டப்பேரவையில் ஹிமாந்தா பிஸ்வா சர்மா உரையாற்றியபோது பசுக்கள் குறித்து பேசினார்.

அதில், "பசு எங்கள் தாய். மாநிலத்தில் உள்ள பசுக்களைப் பாதுகாக்க அரசியலமைப்பின் எல்லைக்குள் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அசாம் அரசு எடுக்கும். பசுவை எங்கள் தாய் என்று நாங்கள் நம்புகிறோம். மேற்கு வங்கத்தில் இருந்து மாடுகளை கடத்த நாங்கள் அனுமதிக்க மாட்டோம். மாடுகளை வணங்கும் இடங்களில், மாட்டிறைச்சி சாப்பிடக்கூடாது.

ஆனால் அனைத்து மக்களும் திடீரென்று தங்கள் பழக்கத்தை மாற்ற வேண்டும் என்று நான் அர்த்தப்படுத்தவில்லை. நுகர்வோர் அல்லாத இடங்களில் மாட்டிறைச்சி உட்கொள்வதை மக்கள் கைவிட வேண்டும் என்றே நாங்கள் முறையிடுகிறோம். பசுவதை நிறுத்தப்பட வேண்டும் என்பதற்காக இதை பேசுகிறோம்.

AIUDF எம்.எல்.ஏக்கள் மாட்டு பாதுகாப்பு மசோதாவை ஆதரிக்கும் போது, ஒரு புதிய அசாம் கட்டமைக்கப்படும். இன்று AIUDF எம்.எல்.ஏ கரிமுதீன் பார்பூயா சமஸ்கிருத மொழியில் அல்லாஹ்வின் பெயரில் சத்திய பிரமாணம் செய்துள்ளார். சமஸ்கிருத மொழி கலாச்சாரம் மற்றும் நாகரிகத்தின் அடையாளமாகும். அந்த மொழியில் அவர் சத்திய பிரமாணம் செய்துள்ளது ஒரு நல்ல அறிகுறியாகும். அடுத்த அமர்வில் பசு பாதுகாப்புக்கான புதிய மசோதாவை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது" என்றார்.

முன்னதாக, அசாம் ஆளுநர் ஜெகதீஷ் முகி சட்டசபை அமர்வில் தனது உரையை நிகழ்த்தினார். அதில், "நாங்கள் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையை பின்பற்றுவோம் மற்றும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனையை அமல்படுத்துவோம். நாம் அனைவரும் பசுக்களை வணங்குகிறோம். பசுக்கள் தங்களது பால் மூலம் நம்மை வளர்ப்பதால் இது ஒரு புனித விலங்காக கருதப்படுகிறது.

உண்மையில், இது பூமியின் தெய்வீக அருளின் அடையாளமாகும். அடுத்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் பசு பாதுகாப்பு மசோதாவை அறிமுகப்படுத்த எனது அரசு திட்டமிட்டுள்ளது என்பதை உங்களுக்குத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்" என்று கூறியிருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com