கொரோனா விரைவுச்‌செய்திகள் மே 24: முதல்வர் வேண்டுகோள் முதல் நீதிமன்றம் அதிருப்தி வரை

கொரோனா விரைவுச்‌செய்திகள் மே 24: முதல்வர் வேண்டுகோள் முதல் நீதிமன்றம் அதிருப்தி வரை
கொரோனா விரைவுச்‌செய்திகள் மே 24: முதல்வர் வேண்டுகோள் முதல் நீதிமன்றம் அதிருப்தி வரை

> ஊரடங்கையொட்டி கண்காணிப்பு தீவிரம். தமிழகம் முழுவதும் தளர்வில்லா ஊரடங்கையொட்டி தீவிரப்படுத்தப்பட்ட கண்காணிப்பு. திருச்சியில் அத்துமீறி சுற்றியவர்களின் வாகனங்கள் பறிமுதல்.மதுரையில் ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பு.

> வீடுகளுக்கே சென்று காய்கறி விற்பனை. முழு ஊரடங்கில் வாகனங்கள் மூலம் வீடுகளுக்கே சென்று காய்கறி விற்பனை. சென்னை, மதுரை, திருச்சி உட்பட தமிழகம் முழுவதும் தொடங்கியது. 

> "ஊரடங்கை முழுமையாக கடைப்பிடியுங்கள்" கொரோனா தொற்று சங்கிலியை உடைக்க பொதுமுடக்கத்தை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும். பொதுமக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்.

> தடுப்பூசி ஒதுக்கீடு: உயர் நீதிமன்றம் அதிருப்தி. தமிழகத்துக்கு மத்திய அரசு கொரோனா தடுப்பூசி குறைவாக ஒதுக்கியதாக உயர் நீதிமன்றம் அதிருப்தி. டிசம்பருக்குள் 216 கோடி தடுப்பூசி தயாராகி விடும் என மத்திய அரசு உறுதி.

> 18+ இனி நேரிலும் பதிவு செய்து தடுப்பூசி போடலாம். 18 முதல் 44 வயதினர் கொரோனா தடுப்பூசிக்கு நேரடியாக மையங்களில் பதிவு செய்ய மத்திய அரசு அனுமதி. இணைய தளம் வழியாக மட்டுமின்றி நேரிலும் பதிவு செய்யலாம் என அறிவிப்பு.

> 35,000க்கு கீழிறங்கியது தினசரி கொரோனா. தமிழகத்தில் 35 ஆயிரத்துக்கு கீழ் குறைந்தது தினசரி கொரோனா பாதிப்பு. சென்னையில் 5,000க்கு கீழிறங்கிய ஒருநாள் தொற்று.

> இந்தியாவில் தொடங்கியது ஸ்புட்னிக் வி உற்பத்தி. இந்தியாவில் ஸ்புட்னிக் வி தடுப்பூசி உற்பத்தி தொடங்கியது. ஆண்டுக்கு 10 கோடி குப்பிகள் தயாரிக்கப்படும் என அறிவிப்பு.

> "3ஆவது அலை குழந்தைகளை அதிகம் பாதிக்காது”. கொரோனா 3ஆவது அலை குழந்தைகளை அதிகம் பாதிக்கும் என பரவும் தகவல்கள் தவறு. குழந்தைகள் மருத்துவர் சங்கத்தின் அறிக்கையை சுட்டிக்காட்டி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தலைவர் ரந்தீப் குலேரியா தகவல்.

> 'மாநில அரசுக்கு நேரடியாக தடுப்பூசி தர இயலாது’. கொரோனா தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு நேரடியாக வழங்க இயலாது என அமெரிக்காவின் மாடர்னா நிறுவனம் அறிவிப்பு. மத்திய அரசுடனே ஒப்பந்தம் செய்ய முடியும் என ஃபைசரும் கைவிரிப்பு.

> மத்திய அரசு சர்வதேச டெண்டர் விடுத்து, கொரோனா தடுப்பூசியை கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com