கொரோனா பரவல் உச்சத்தை அடைந்துள்ளது என்ற வார்த்தைக்கு அர்த்தம் உண்மையாகும் வகையில், உலகின் மிகப்பெரிய சிகரமான இமயமலை உச்சியிலும் கொரோனா பரவியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேபாளத்தைச் சேர்ந்த வீரர்கள் இமயமலை சிகரத்தில் ஏறியுள்ளனர். அப்போது வீரர் ஒருவருக்கு கடும் காய்ச்சல் ஏற்பட்டதால், ஹெலிகாப்டர் மூலமாக அந்த வீரரை மலை உச்சியிலிருந்து மீட்டு, நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
ஒரு வீரருக்கு மட்டுமே தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும், மற்றவர்களுக்கு அறிகுறி இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இமயமலை உச்சியிலும் கொரோனா பரவியிருப்பது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.