\
கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கொரோனா பாதிப்பு

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கொரோனா பாதிப்பு

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கொரோனா பாதிப்பு
Published on

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கேரள சட்டமன்றத்தேர்தலையொட்டி பல்வேறு கூட்டங்களிலும் பரப்புரைகளிலும் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் பங்கேற்றிருந்தார். இதைத்தொடர்ந்து பினராயி விஜயனின் மகளுக்கு கடந்த 6 ஆம் தேதி கொரோனா தொற்று உறுதியாகியது.

இந்நிலையில் பினராயி விஜயனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா தொற்று உறுதியாகிய போதிலும் அவருக்கு முக்கிய மருத்துவ பிரச்னை எதுவும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இருந்தாலும் பினராயி விஜயனுக்கு 76 வயது ஆவதால் அவரது குடும்பத்தினரும் கட்சியினரும் மிகவும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com