மருத்துமனையில் அதிகநாட்கள் தங்கியிருக்கும் நோயாளிகள் வீட்டிற்கு செல்லவும்: எடியூரப்பா
பெங்களூருவில் டிஸ்சார்ஜ் செய்யலாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்திய பிறகும், 835க்கும் மேற்பட்டவர்கள் 20 நாட்களுக்கும் மேலாக மருத்துவமனையில் உள்ளனர் என்று எடியூரப்பா கூறினார்
இது தொடர்பாக பேசிய கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, “கொரோனா சிகிச்சை பிரிவில் 20 நாட்களுக்கும் மேலாக சுமார் 835 நோயாளிகள் படுக்கைகளை ஆக்கிரமித்துள்ளனர் என்பதை நோய்க்கட்டுப்பாட்டு அறையின் தரவுகளிலிருந்து தெரிந்து கொண்டேன். இதில் 332 நோயாளிகள் 30 நாட்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டிய அவசியம் என்ன? அவர்கள் படுக்கைகளை காலி செய்ய வேண்டும். அதுபோல 20 நாட்களுக்கும் மேலாக மருத்துவமனைகளில் 503 நோயாளிகள் உள்ளனர்” எனத் தெரிவித்தார்.
மேலும் “மருத்துவமனைகளில் 15 முதல் 20 நாட்களுக்கு மேலாக இருப்பவர்களை வீட்டுக்கு அனுப்ப மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், புதிய நோயாளிகளுக்கு வழிவிட வேண்டும். 10 நாட்களுக்கு பிறகு தங்கியிருக்கும் அனைவரும் மருத்துவமனையிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும், அதன்பின்னர் அத்தகைய நோயாளிகளுக்கு மருந்துகளும்,வீட்டு பராமரிப்புதான் தேவை, மருத்துவமனை பராமரிப்பு தேவையில்லை" ” என்று கூறினார்.