40 வயதுக்கு மேற்பட்டவர்களே...! - விருப்ப ஓய்வை கையிலெடுத்த ஹோண்டா நிறுவனம்!

40 வயதுக்கு மேற்பட்டவர்களே...! - விருப்ப ஓய்வை கையிலெடுத்த ஹோண்டா நிறுவனம்!
40 வயதுக்கு மேற்பட்டவர்களே...! - விருப்ப ஓய்வை கையிலெடுத்த ஹோண்டா நிறுவனம்!

கொரோனாவுக்கு முன்பு பொருளாதார மந்தநிலை மற்றும் விற்பனை சரிவு ஆகிய காரணங்களால் ஆட்டம்கண்டு வந்த ஆட்டோமொபைல் துறை, கொரோனாவுக்கு பின் அதைவிட மோசமான வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.

கொரோனா பரவல் காரணமாக, முதல் காலாண்டின் பெரும்பகுதியில் பூஜ்ஜியம் தயாரிப்பும், பூஜ்ஜியம் விற்பனையும் நடைபெற்றிருந்தது. இந்த காலாண்டில் உற்பத்தி என்பது, வழக்கமான இரு வார உற்பத்திக்கு சமமானதாகும்.

இந்நிலையில் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் முன்னணி நிறுவனமாக வலம் வந்து கொண்டிருக்கும் ஹோண்டா கார்ஸ் நிறுவனம், விருப்ப ஓய்வூதிய திட்டத்தை (வி.ஆர்.எஸ்.) அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் அல்லது 5 ஆண்டுகள் சேவையை நிறைவு செய்த ஊழியர்களை விருப்பத்துடன் வெளியேறி விடுன

நிறுவனத்தின் செலவினங்களைக் கட்டுப்படுத்தவும், செயல்திறனைக் கொண்டுவரவும் வி.ஆர்.எஸ். திட்டத்தை செயல்படுத்தி உள்ளதாக, ஹோண்டா நிறுவன செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், "வி.ஆர்.எஸ் திட்டம் ஜூலை 24 அன்று தொடங்கப்பட்டது. மேலும் தற்போதைய சந்தை நிலைமை மற்றும் தொழில்துறை முன்னறிவிப்பின் அடிப்படையில் எங்கள் செயல்பாடுகளில் செயல்திறனை மேம்படுத்த நிறுவனம் வாய்ப்பளிக்கிறது. இந்த வி.ஆர்.எஸ் திட்டம், 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் அல்லது 5 ஆண்டுகள் சேவையை நிறைவு செய்த கூட்டாளர்களுக்கான திட்டம்’’ என்று செய்தித் தொடர்பாளர்  தெரிவித்தார்.

பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடனா ஒரு உரையாடலில், ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தின் தலைவரும், தலைமை நிர்வாகியுமான காகு நக்கானிஷி கூறும்போது, ‘’கொரோனா பரவல் இருந்தபோதிலும், கொரோனாவுக்கு முன்பிருந்த பைப்லைன் உற்பத்தி மற்றும் மூலதன செலவு தொடர்பான ஹோண்டாவின் திட்டங்கள் அப்படியேதான்  தொடர்கின்றன''’’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com