இந்தியா
67 ஆயிரத்தை தாண்டியது இந்தியாவில் கொரோனா பாதிப்பு
67 ஆயிரத்தை தாண்டியது இந்தியாவில் கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 67 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்தியாவை பொருத்தவரை, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67,152 ஆக உள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,109 லிருந்து 2,206 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 20,917 ஆக உள்ளது. இன்னும் 44, 029 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 4,213 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 22,171 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்ததாக குஜராத்தில் 8,194 பேரும், தமிழ்நாட்டில் 7,204 பேரும், டெல்லியில் 6,923 பேரும், ராஜஸ்தானில் 3,814 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.