உத்தராகண்ட் : பவுரி மாவட்டத்தில் ஒரு வாரம் முழு ஊரடங்கு உத்தரவு

உத்தராகண்ட் : பவுரி மாவட்டத்தில் ஒரு வாரம் முழு ஊரடங்கு உத்தரவு
உத்தராகண்ட் : பவுரி மாவட்டத்தில் ஒரு வாரம் முழு ஊரடங்கு உத்தரவு

உத்தராகண்டில்  கொரோனா பரவல் அதிகரித்து வருவதால்,  அம்மாநிலத்தின் பவுரி மாவட்டத்தில் சில பகுதிகளில் முழு ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு இன்று இரவு 7 மணி முதல் மே 3 ஆம் தேதி அதிகாலை 5 மணி வரை அமலில் இருக்கும்.

பவுரி மாவட்ட மாஜிஸ்திரேட் விஜய் குமார் ஜோகண்டே கூறுகையில், மாவட்டத்தின் ஸ்வர்காஷ்ரம் மற்றும் லக்ஷ்மஞ்சூலாவின் கோட்வார் மாநகராட்சி பகுதியில் முழு ஊரடங்கு உத்தரவு விதிக்கப்படும். மேலும் ஏப்ரல் 27 முதல் மே 3 வரை டேராடூன் மாவட்டம், ஹால்ட்வானி மாநகராட்சி, லல்குவான் நகர் பஞ்சாயத்து மற்றும் நைனிடால் மாவட்டத்தின் ராம்நகர் பகுதிகளிலும் முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

உத்தராகண்ட் மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில்  4,368 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர், 1,748 பேர் குணமடைந்தனர். 44 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்தது. மாநிலத்தில் இப்போது மொத்தமாக 35,864 பேர் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருகிறார்கள், மொத்த இறப்பு எண்ணிக்கை 2,164 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அனைத்து அரசு அலுவலகங்களும் ஏப்ரல் 23 முதல் ஏப்ரல் 28 வரை மூடப்படும் என்று உத்தராகண்ட் அரசு முன்பு உத்தரவிட்டிருந்தது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com