இந்தியா
கோவாக்சின் கொரோனா தடுப்பூசி - அவசரகால பயன்பாட்டுக்கு பரிந்துரை
கோவாக்சின் கொரோனா தடுப்பூசி - அவசரகால பயன்பாட்டுக்கு பரிந்துரை
ஐதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின் தடுப்பூசியை அவசர கால தேவைக்கு பயன்படுத்த அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.
இந்தியாவில் கோவிஷீல்டை தொடர்ந்து அவசர கால பயன்பாட்டிற்கு பரிந்துரைக்கப்படும் இரண்டாவது தடுப்பூசி கோவாக்சின் ஆகும். ஏற்கெனவே சீரம் இன்ஸ்டியூட் தயாரிக்கும் கோவிஷீல்டு தடுப்பூசியை அவசர தேவைக்கு பயன்படுத்த மத்திய அரசுக்கு நிபுனர் குழு பரிந்துரை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.