'பி.1.617' கொரோனா வகையை தடுக்குமா கோவாக்சின், கோவிஷீல்டு? - ஐசிஎம்ஆர் விளக்கம்

'பி.1.617' கொரோனா வகையை தடுக்குமா கோவாக்சின், கோவிஷீல்டு? - ஐசிஎம்ஆர் விளக்கம்
'பி.1.617' கொரோனா வகையை தடுக்குமா கோவாக்சின், கோவிஷீல்டு? - ஐசிஎம்ஆர் விளக்கம்

கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூகள் கொரோனா முதல் அலையின்போது உருவாக்கப்பட்டவை. அந்த நேரத்திலிருந்த கொரோனா, இப்போது உருமாறி, தன்மையை  மாற்றிக்கொண்டது. தன்மையை மாற்றிக்கொண்ட இந்த கொரோனாவுக்கு எதிராகவும் கோவாக்சினும் கோவிஷீல்டும் செயல்படுமா? - இதுபற்றி ஆய்வு செய்த ஐ.சி.எம்.ஆர். அதன் பதிலை தற்போது கூறியுள்ளதை விரிவாக பார்ப்போம்.

இந்தியாவில் தற்போதைக்கு அதிகப்படியான மக்களுக்கு செலுத்தப்பட்டிருக்கும் தடுப்பூசிகள் கோவிஷீல்டும் கோவாக்சினும்தான். இந்த தடுப்பூசிகள் முதல் அலை கொரோனா பாதிப்பு ஏற்பட்டபோது, அதை தடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டது. ஆனால், கொரோனா வேகமாக உருமாறி, தற்போது இரண்டாம் அலை பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பி.1.617 எனப்படும் இந்த புதிய உருமாறிய கொரோனாவுக்கு எதிராக கோவிஷீல்டும் கோவாக்சினும் எந்த அளவுக்கு செயல்படும் என்பது கேள்விக்குறியாகியது.

இதுசார்ந்த சந்தேகங்கள் இருந்துவரும் சூழலிலும், தடுப்பூசி விநியோகத்தை தடுக்க வேண்டாம் என்ற நோக்கத்தில் செயல்படுகிறது அரசு. இதன்மூலம், கொரோனாவுக்கு எதிரான ஆன்டிபாடிகளை மக்களின் உடலுக்குள் அனுப்புவோம் என்பதுதான் இந்த நோக்கத்தின் அடிப்படை. மேற்கொண்டு, இப்போதுள்ள உருமாறிய கொரோனாவுக்கு (பி.1.617 வகை கொரோனா) எதிரான மருந்து மாத்திரைகள் தடுப்பூசி குறித்தும் ஆய்வுகள் நடந்து வருகின்றது.

இந்நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் அளித்திருக்கும் தகவலில், கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் பி.1.617 வகை உருமாறிய கொரோனாவை 50 சதவிகிதம் தடுப்பதாக கூறப்பட்டுள்ளது. 50 சதவிகிதம் தடுக்கப்படும் என்பதை குறைவாக எண்ண வேண்டாம், இதுவும் இப்போதைக்கு நாம் பரவலை தடுக்க உதவும் பேராயுதமாக இருக்குமென சொல்கின்றனர் வல்லுநர்கள்.

கடந்த ஜனவரி மாதம், பூனேவிலுள்ள ஐ.சி.எம்.ஆர்.-ன் தேசிய தேசிய வைராலஜி நிறுவனத்தின் (என்.ஐ.வி.) விஞ்ஞானிகள் சார்பில் இதற்கான ஆய்வுகள் நடத்தப்பட்டது. அப்போது இந்தியாவில் பரவும் பி.1.617 வகை உருமாறிய கொரோனா வகை; இதோடு ஒத்துப்போகும் ஐ.நா. வில் பரவில் பி.1.1.7 கொரோனா வகை; தென் ஆப்பிராக்கிவில் பரவிய பி.1.351 கொரோனா வகை; பிரேசிலில் பரவிய பி.2 வகை போன்றவற்றுக்கு எதிராக கோவாக்சினும் கோவிஷீல்டும் எந்த அளவுக்கு செயல்படுகிறது என்று சோதிக்கப்பட்டது.

இந்த பி.1.1.7 வகை, பி.1.351 வகை, பி.2 வகை ஆகியவைதான் இப்போது இந்தியாவில் பி.1.617 வகைக்கு அடுத்தபடியாக பரவிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆய்வின் முடிவில், கோவாக்சினும் கோவிஷீல்டும் பி.1.617 வகை கொரோனாவுக்கு எதிராக பி.1 (எ) முந்தைய அலை கொரோனா பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வகைக்கு செயல்பட்டதை விடவும் தோராயமாக 55 சதவிகிதம் குறைவாக செயல்படுவது தெரியவந்துள்ளது. அதாவது பி.1 கொரோனா வகையை, கோவாக்சினும் கோவிஷீல்டும் 42.92 சதவிகிதம் செயல்படுகிறதென்றால், பி.1.617-க்கு எதிராக 21.9 சதவிகிதம்தான் செயல்படுகிறது. இதுவே பி.1.1.7 வகைக்கு, 6 சதவிகிதம் குறைவாகும், பி 2 வகைக்கு 50 சதவிகிதம் குறைவாகும் செயல்படுவது தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வுகள் அனைத்தும் குறைவான நபர்களுக்கு மட்டுமே இப்போதைக்கு செய்யப்பட்டிருப்பதால், இந்த சதவிகித கணக்கில் மாற்றங்கள் வருமென்றும் கணிக்கப்படுகிறது. இந்த தடுப்பூசிகள், இனிவரும் காலங்கலில் உருவாகும் கொரோனா வகைகளை தடுக்குமா என்பது தெரியாததால், தடுப்பூசிகள் மீதான கேள்விகளும் அச்சமும் அப்படியே இருக்கிறது.

தகவல் உறுதுணை : The Hindu

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com