மனைவியின் ஆபாச படத்தை காட்டி ரூ. 25 லட்சம் கேட்ட கணவன் கைது!
மனைவியின் ஆபாச படத்தைக் காட்டி ரூ.25 லட்சம் கேட்டு மிரட்டிய இளம்பெண்ணின் கணவன் மற்றும் அவரது உறவினர் கைது செய்யப்பட்டனர்.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் மும்பை லாக்பாக்கில் கணவனுடன் வசித்துவந்தார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையுள்ளது. கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக சொந்த ஊரான ராஜஸ்தானுக்கு வந்துவிட்டார் இளம்பெண். சில நாட்கள் கழித்து அவரது மொபைல் போனுக்கு ஓர் ஆபாச புகைப்படம் வந்தது. அது அந்த இளம்பெண்ணின் புகைப்படம். இதை வெளியே யாருக்கும் அனுப்பாமல் இருக்க வேண்டும் என்றால் ரூ.25 லட்சம் தர வேண்டும் என்று கேட்டார் அந்த கண்ணியமிக்க கணவன். இளம்பெண் குடுத்தார் மறுக்கவே, அவரது உறவினர்கள் மற்றும் கிராம பஞ்சாயத்து நிர்வாகிகள் உள்ளிட்டோருக்கு அனுப்பி வைத்துவிட்டார் கணவர். இதனால் பஞ்சாயத்து இளம்பெண்ணை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துவிட்டது. இதையடுத்து கணவன் மீது போலீசில் புகார் கொடுத்துள்ளார் அந்த இளம்பெண்.
அதில், ‘என் கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் சொந்த கிராமத்துக்கு வந்துவிட்டேன். எனது உறவினர் ஒருவர் எனக்கு உதவினார். அவருடன் நெருக்கமாக இருந்தேன். அவர் என்னை ஆபாசமாக படமெடுத்து எனது கணவருக்கு அனுப்பியுள்ளார். அவர் எனது உறவினர்களில் இருந்து பஞ்சாயத்துவரை அந்தப் படங்களை அனுப்பி என்னை அவமானப்படுத்திவிட்டார்’ என்று கூறியிருந்தார். இதையடுத்து போலீசார் கணவன் மற்றும் உறவினரை கைது செய்தனர்.