மகாராஷ்டிராவில் 12 பாஜக எம்.எல்.ஏக்கள் தொடர்பான வழக்கு - தடை ரத்து
மகாராஷ்டிராவில் பாஜக எம்.எல்.ஏக்கள் 12 பேர் சட்டமன்ற கூட்டத்தொடரில் கலந்துகொள்ள ஒரு வருடம் விதிக்கப்பட்ட தடையை உச்சநீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
மழைக்கால கூட்டத்தொடரின்போது சபாநாயகர் அறையில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாகக் கூறி பாஜகவைச் சேர்ந்த 12 சட்டமன்ற உறுப்பினர்கள் ஓராண்டிற்கு சட்டப்பேரவை அலுவல்களில் கலந்துகொள்ள தடை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து 12 எம்.எல்.ஏக்களும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், நடவடிக்கை என்றால் ஒரு கூட்டத்தொடரில் இருந்து வேண்டுமானால் நீக்கம் செய்யலாமே தவிர காலவரம்பின்றி இடைநீக்கம் செய்வது சட்ட விரோதம் என நீதிபதிகள் தெரிவித்தனர். தொடர்ந்து கூட்டத்தொடரில் கலந்து கொள்வதில் இருந்து 12 சட்டமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

