பிஹார் சட்டமன்ற தேர்தல்| வெற்றி பெறப் போவது யார்? இன்று வாக்கு எண்ணிக்கை!
பிஹார் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படும் நிலையில், பிற்பகலுக்குள் ஆட்சியை பிடிக்கப் போவது யார் என்பது தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிஹாரில் இன்று வாக்கு எண்ணிக்கை..
பிஹாரில் இரண்டு கட்டங்களாக நடந்த சட்டமன்ற தேர்தலில் ஒட்டுமொத்தமாக 66.91 விழுக்காடு வாக்குகள் பதிவாகிஇருந்தன. இதில் 71.6 விழுக்காடுஆண்களும், 62.8 விழுக்காடு பெண்களும் வாக்களித்ததாக தேர்தல் ஆணையம்அறிவித்துள்ளது.
மொத்தம் 243 தொகுதிகளை கொண்ட பிஹார் சட்டமன்றத்தில், ஆட்சி அமைக்க 122தொகுதிகள் தேவை. தேசியஜனநாயக கூட்டணியே ஆட்சிஅமைக்கும் என பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் கூறினாலும், இந்தியா கூட்டணி 160 இடங்களுக்குமேல் வெற்றி பெறும் என,எதிர்க்கட்சிகளின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்திருந்தார்.
2020 சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 125 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. இந்தியா கூட்டணி 110 இடங்களை கைப்பற்றியிருந்தது. பிஹார் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறப் போவது யார்?, ஆட்சியில் அமரப்போவது யார்? என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது..
வாக்கு எண்ணிக்கை நியாயமாக இருக்கவேண்டும்..
பிஹார் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் நியாயமாக இல்லாவிட்டால், பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராடுவார்கள் என, ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியின் மூத்த தலைவர் சுனில்சிங் எச்சரித்துள்ளார்.
2020ஆம்ஆண்டு தேர்தலில் பல இடங்களில் வெற்றி பெற்ற ராஷ்ட்ரிய ஜனதா தள வேட்பாளர்கள், வலுக்கட்டாயமாக தோற்கடிக்கப்பட்டனர் என அவர் குற்றம்சாட்டியுள்ளார். வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட்டுள்ளஅதிகாரிகள் மக்களின் உணர்வுகளுக்கு எதிராக செயல்பட்டால், நேபாளம், வங்கதேசம், இலங்கையில் உள்ள சாலைகளில் கண்ட அதே காட்சிகளை பிஹார் சாலைகளிலும் காண நேரிடும்என எச்சரித்துள்ளார்.
தேர்தல் அதிகாரிகள் நீதியை நிலைநாட்டவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ள சுனில் சிங், யாருடைய அழுத்தத்தாலும் அதிகாரிகள் தவறாக வழிநடத்தப்படக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளாார்.
நடுநிலையோடு செயல்பட வேண்டும்..
பிஹார் வாக்கு எண்ணிக்கையின் போது ஏற்படும் முறைகேடுகள் குறித்து எச்சரித்துள்ள இந்தியா கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ், தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
பாட்னாவில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 2020ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் முடிவு குறித்து நினைவு கூர்ந்தார். அப்போது தங்களது கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதியாக இருந்த நிலையில், அதிகாரிகள் சிலரின் தவறான கையாளுதலால் அது நடக்காமல் போனதாக குற்றஞ்சாட்டினார்.

