பிஹார் சட்டமன்ற தேர்தல்| ஆட்சியை பிடிக்கப்போவது யார்..? தொடங்கியது வாக்கு எண்ணிக்கை!
243 தொகுதிகள் கொண்ட பீகார் சட்டமன்றத் தேர்தல் நவம்பர் 6 மற்றும் நவம்பர் 11-ஆம் தேதிகளில் இரண்டுகட்டமாக நடைபெற்றது.. முதற்கட்டமாக 18 மாவட்டங்களில் உள்ள 121 தொகுதிகளில் நவம்பர் 6ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக 20 மாவட்டங்களில் உள்ள 122 தொகுதிகளில் நவம்பர் 11ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெற்றது.
பரபரப்பாக நடந்துமுடிந்துள்ள தேர்தலில் கடந்த 2020-ம் ஆண்டு 57.29% சதவீதமாக இருந்த வாக்குப்பதிவுகளை விட கிட்டத்தட்ட 9% சதவீத வாக்குகள் அதிகமாக பதிவாகி சாதனை படைத்தன.. நடந்து முடிந்துள்ள 2025 பிஹார் சட்டமன்ற தேர்தலில் மொத்தமாக 66.91 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும், இதில் 71.6 சதவீதம் பெண்களும், 62.8 சதவீத ஆண்களும் வாக்களித்ததாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. எப்போதும் இல்லாத வகையில் ஆண்களை விட பெண்கள் அதிகளவில் வாக்களித்திருப்பது கவனத்தை பெற்றுள்ளது..
மொத்தம் 243 தொகுதிகளை கொண்ட பிஹார் சட்டமன்றத்தில், ஆட்சி அமைக்க 122தொகுதிகள் தேவையாக உள்ள நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி, மகாகத்பந்தன் கூட்டணி, பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி என மும்முனைப் போட்டி நிலவுகிறது..
இதில் தேசியஜனநாயக கூட்டணியே ஆட்சிஅமைக்கும் என பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் கூறினாலும், இந்தியா கூட்டணி 160 இடங்களுக்குமேல் வெற்றி பெறும் என, எதிர்க்கட்சிகளின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக இரண்டு கட்சிகளும் தலா 101 இடங்களில் போட்டியிட்டன. மகாகத்பந்தன் கூட்டணியில் இரண்டு பெரிய கட்சிகளான ராஷ்ட்ரிய ஜனதா தளம் 143 இடங்களிலும், காங்கிரஸ் 61 இடங்களிலும் போட்டியிட்டன..
இந்தசூழலில் யார் மெஜாரிட்டியை நிரூபிக்க போகிறார்கள், ஆட்சியை பிடிக்கப்போகிறது என்ற எதிர்ப்பார்ப்புகிடைக்கியில் இன்று பிஹாரில் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டுள்ளது..
தற்போதைய அப்டேட்டின் படி தேசிய ஜனநாயகக் கூட்டணி 40 இடங்கள், இண்டியா கூட்டணி 22 இடங்கள், பிரசாந்த் கிஷோரின் ஜான் சுராஜ் 3 இடங்கள் மற்றவை 4 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன..

