தெலங்கானாவில் ஆம்புலன்ஸ் பற்றாக்குறை... 30% அழைப்புகளுக்கு உதவ முடிவதில்லை

தெலங்கானாவில் ஆம்புலன்ஸ் பற்றாக்குறை... 30% அழைப்புகளுக்கு உதவ முடிவதில்லை
தெலங்கானாவில் ஆம்புலன்ஸ் பற்றாக்குறை... 30% அழைப்புகளுக்கு உதவ முடிவதில்லை

தெலங்கானாவில் ஆம்புலன்ஸ் சேவை பற்றாக்குறையால் இந்த ஆண்டு 30% பேருக்கு உதவ முடியவில்லை என மாநில சுகாதாரத் துறை ஆவணத்தின்படி இந்தியன் எக்ஸ்பிரஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

அந்த ஆவணத்தின்படி, பெரும்பாலான ஆம்புலன்ஸ்கள் கர்ப்பிணிகளை தலைமை மருத்துவமனையிலிருந்து உள்ளூர் மருத்துவமனைகளுக்கு மாற்றும் பணிகளில் ஈடுபடுவதுதான் பல அழைப்புகளுக்கு உதவமுடியாமல் போவதற்குக் காரணம் எனக் கூறியுள்ளது. 2018 நவம்பர் முதல் 2019 நவம்பர் வரை 3,13,080 அழைப்புகளுக்கு 108 ஆம்புலன்ஸ்கள் சென்று உதவியுள்ளது. இதில் 40%, அதாவது 1,24,087 அழைப்புகள் பிரசவம் தொடர்பானவை, அதே நேரத்தில் 77,515 அழைப்புகள் அவசர சிகிச்சைக்காகவும் வந்துள்ளன. இதில் 29%, அதாவது 1,33,218 அழைப்புகளுக்கு ஆம்புலன்ஸ் பற்றாக்குறையால் உதவமுடியவில்லை. விபத்துக்காக அழைக்கப்பட்ட 287 அழைப்புகள் மிஸ்டு கால்களாக பதிவாகியுள்ளன.

இதனைக் கருத்தில்கொண்ட சுகாதாரத்துறை அதிநவீன வசதிகளைக்கொண்ட(ஏ.எல்.எஸ்) 108 ஆம்புலன்ஸுகளை வாங்கத் திட்டமிட்டது. அதனால் 2020இல் இந்தத் திட்டத்தை செயல்படுத்த ரூ.5.83 கோடி வழங்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது. இதன்மூலம் 2021இல் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு ஆம்புலன்ஸை கூடுதலாக வழங்கமுடியும்.

தற்போது தெலங்கானா மாநிலத்தில் 30 ஏ.எல்.எஸ் ஆம்புலன்ஸ்கள் இயங்கிவருகின்றன. அதில் 5 ஹைதராபாத்திலும், மற்றவை 19 மாவட்டங்களிலும் இயங்கி வருகிறது. இதுபோக மற்ற 13 மாவட்டங்களில் ஒரு ஏ.எல்.எஸ் ஆம்புலன்ஸ் வசதிகூட இல்லை. இந்த ஆம்புலன்ஸ் பற்றாக்குறையால் ஹைதராபாத்தில் 10 நிமிடத்திலும், மற்ற மாவட்டங்களில் 20 நிமிடத்திலும்தான் ஆம்புலன்ஸ் சேவை வந்தடைகிறது. 2018-19 நவம்பர்வரை பெறப்பட்ட 20%, அதாவது 56,991 அழைப்புகளுக்கு இந்த 30 ஏ.எல்.எஸ் ஆம்புலன்ஸுகளும் சேவை புரிந்துள்ளது. அதில் 46,080 அவசர அழைப்புகள் பிரசவம் தொடர்பாக வந்துள்ளது.

2.5 லட்சம் மக்களுக்கு ஒரு ஏ.எல்.எஸ் ஆம்புலன்ஸ் எனக் கணக்கிட்டாலும், தற்போதுள்ள தெலங்கானா மக்கள்தொகை 3.5 கோடிக்கு, 140 ஆம்புலன்ஸ்கள் தேவைப்படுவதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. எனவே இதுகுறித்து மத்திய அரசுக்கு மாநில சுகாதாரத் துறை கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com