\
"கூகுள் கூகுள் பண்ணிப் பார்த்தாலும்... இனி தொலைபேசி எண் கிடைக்காது"

"கூகுள் கூகுள் பண்ணிப் பார்த்தாலும்... இனி தொலைபேசி எண் கிடைக்காது"

"கூகுள் கூகுள் பண்ணிப் பார்த்தாலும்... இனி தொலைபேசி எண் கிடைக்காது"
Published on

கூகுள் தேடுதலில் இருந்து பயனர்கள் தங்கள் தனிப்பட்ட விவரங்களை மற்றவர்கள் அறியாதபடி பராமரிக்கும் வசதி வழங்கப்படுகிறது.

அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என உலகின் எந்த மூலையில் இருப்பவர்களை இருந்த இடத்தில் இருந்தே கண்டறிந்து விட கூகுள் உதவுகிறது. அந்த வகையில், அவர்களது தனிப்பட்ட தொலைபேசி எண்கள், மின்னஞ்சல் மற்றும் வீட்டின் முகவரிகளையும் கூகுளில் தேட முடிகிறது.

இதனிடையே, தனிப்பட்ட தகவல்கள் கூகுள் தேடுதலில் கிடைக்காமல் ரகசியம் காக்க வாய்ப்பளிக்குமாறு பயனர்களிடம் இருந்து தொடர்ந்து கோரிக்கை எழுந்து வந்தது. அதன்படி, வங்கிக் கணக்குகள், கடன் அட்டை எண் போன்றவற்றை கூகுள் ஏற்கெனவே நீக்கி இருந்தது. இந்நிலையில், மற்ற தனிப்பட்ட தகவல்களையும் கூகுள் தேடுதலில் இருந்து தாங்கள் மட்டும் அறியும் வகையில் பராமரிக்கும் வசதியை கூகுள் தற்போது வழங்கியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com