தலைநகரை தவிக்கவைக்கும் கொரோனா: விழிபிதுங்கும் டெல்லி மக்கள், புலம்பெயர் தொழிலாளர்கள்

தலைநகரை தவிக்கவைக்கும் கொரோனா: விழிபிதுங்கும் டெல்லி மக்கள், புலம்பெயர் தொழிலாளர்கள்

தலைநகரை தவிக்கவைக்கும் கொரோனா: விழிபிதுங்கும் டெல்லி மக்கள், புலம்பெயர் தொழிலாளர்கள்
Published on

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் கொரோனா பாதிப்பின் வீரியம் மிக அதிகமாக உள்ளது. புலம்பெயர் தொழிலாளர்கள் சிக்கல், ஆக்சிஜன் பற்றாக்குறை, படுக்கைகள் பற்றாக்குறை என திணறுகிறது டெல்லி.

இந்தியாவில் கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களில் ஒன்றாக டெல்லி உள்ளது. கொரோனா இரண்டாம் அலையின் பாதிப்புகள் டெல்லியில் நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. டெல்லியில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 23,686 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், 240 உயிரிழந்துள்ளனர். டெல்லியில் இதுவரை மொத்தமாக 8,77,146 பேர் கொரோனா பாதிப்பிற்கு உள்ளாகியிருக்கிறார்கள், 12,361 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இதில் கடந்த 14 நாட்களில் மட்டும் 1,97,184 பேர் டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்ப்பட்டிருக்கிறார்கள்

கொரோனா வேகமாக பரவி வருவதால் டெல்லியில் நேற்று இரவு முதல் ஏப்ரல் 26 ஆம் தேதி காலைவரை ஒருவாரகாலம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. டெல்லியில் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டதால் நேற்று இரவு சொந்த ஊர்களுக்கு திரும்ப புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் கூட்டம் கூட்டமாக வெளியேறினார்கள். ஊரடங்கு நீடிக்கும் என்ற அச்சத்தில் மக்கள் கடைகளில் முண்டியடித்து பொருட்களை வாங்கினர்.

டெல்லியில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக்குறை, ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை போன்ற பல்வேறு சிக்கல்களால் திணறிவருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com